குழந்தைக்கு ஆபரேஷன்.. ஜேகே ரித்தீஷ் செய்த செயல்.. பல வருட ரகசியத்தை உடைத்த ஆர்ஜே பாலாஜி
சென்னை: ஆர்.ஜே பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிக் கொண்டு இருக்கும்போது தான் சினிமா துறையில் பார்த்து வியந்தவர்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் மறைந்த நடிகர் ஜேகே ரித்தீஷ் பற்றியும் அவர் யாருக்கும் தெரியாமல் செய்த உதவிகள் குறித்து வெளிப்படையாக ஆர்.ஜே பாலாஜி பேசியிருக்கிறார்.
திரைத் துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, சாதாரணமானவர்களாக இருந்தாலும் சரி ஒரு சிலர் வெளியே பார்ப்பதற்கு கரடு முரடானவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் இன்னொரு பக்கத்தில் பலர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தாங்கள் செய்த உதவியை வெளியே சொல்லாமலேயே மறைத்து விடுகிறார்கள்.

ஆனால் உதவி பெற்றவர்கள் அல்லது அதை பார்த்து வியந்து போனவர்களும் உண்மைகளை வெளியே சொல்லும்போது பலருக்கும் வியப்பு ஏற்படுத்தும். அந்த மாதிரி தான் இப்போது ஆர்ஜே பாலாஜி மறைந்த நடிகர் ஜேகே ரித்தீஷ் பற்றி பேசியது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. ஜேகே ரித்தீஷ் நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் இருந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
நான் இறந்துட்டா என் மகனை பத்திரமா பார்த்துக்கோங்க! 30 வருட ரகசியம்..லாரன்ஸின் அம்மா கண்ணீர் வார்த்தை
ஆனால் ஜேகே ரித்தீஷ் காலமாவதற்கு முன்பே தமிழில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல ஆர்.ஜே பாலாஜி ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்து வந்தாலும் இப்போது அதிகமான குடும்ப பாங்கான திரைப்படங்களிலும் சீரியஸான கேரக்டர்களிடம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியான பிறகு ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு கிரிக்கெட் கமாண்டராகவும் இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.ஜே பாலாஜி தன்னோடு எல்கேஜி திரைப்படத்தில் நடித்த நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜேகே ரித்தீஷ் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஜேகே ரித்தீஷ் அதிகமாக உதவும் குணம் உடையவர். யாராவது ஒருவர் பசிக்கிறது சாப்பிடவில்லை என்று சொன்னால் அவர்களிடம் 500 ரூபாய் கட்டை எடுத்து அப்படியே கொடுத்து விடுவார்.

ஜேகே அரசியல்வாதி, நடிகர் என்பதை எல்லாம் தாண்டி அவர் உதவும் விஷயத்தில் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். பல பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அப்படி உதவும் மனப்பான்மை வருவதில்லை. ஒரு முறை நான் அவருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அங்கு ஒரு சிறுவனுக்கு உடல்நிலை பிரச்சினை இருக்கிறது, அதற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும். ஆனால் பணம் இல்லை என்று அவருடைய பெற்றோர் அழுதனர்.
அப்போது நான் உதவுகிறேன் என்று சொல்வதற்கு முன்பே ரித்தீஷ் எழுந்து அந்த குழந்தையின் மருத்துவ செலவை பார்த்துக்கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்தார். வாக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த குழந்தையின் வீட்டிற்கே சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செலவுகளை பார்த்துக் கொண்டார். இதெல்லாம் இந்த காலத்தில் யார் செய்வார்கள்? என்று அந்த பேட்டியில் ஆர்.ஜே பாலாஜி பேசியிருக்கும் நிலையில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
