நான் இறந்துட்டா என் மகனை பத்திரமா பார்த்துக்கோங்க! 30 வருட ரகசியம்..லாரன்ஸின் அம்மா கண்ணீர் வார்த்தை
சென்னை: நடிகர், சமூக சேவகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என்று பல அடையாளங்களைக் கொண்ட ராகவா லாரன்ஸின் அம்மா கண் கலங்க பேட்டி ஒன்றில் பேசிய வார்த்தைகள் குறித்து இணையத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
ராகவா லாரன்ஸ் பல வருடங்களாகவே தன்னால் முடிந்த அளவிற்கு குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கும் உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். இப்போது விவசாயிகளுக்கும் 10 டிராக்டர் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தன்னிடம் மனு கொடுக்கும் எல்லா தரப்பட்டவர்களுக்கும் தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து கொண்டிருக்கும் லாரன்ஸ் மாஸ்டர் அவருடைய அம்மாவோடு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது லாரன்ஸின் அம்மா கண்கலங்க பேசி இருக்கிறார்.

அதில் என்னுடைய மகன் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நான் எந்த இடத்திலும் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டது கிடையாது. எனக்கு நாளைக்கு ஏதாவது ஆகி நான் இறந்துட்டா என்னுடைய மகனை நீங்க எல்லாரும் பத்திரமா பாத்துக்கோங்க... லாரன்ஸிற்க்கு என்னை போலவே இங்கு அவருக்கு நிறைய அம்மாமார்கள் இருக்கிறார்கள் எனக்கு தெரியும்.
நான் வெளியே போகும்போது கூட எல்லோரும் உங்க பையன் நல்லா இருக்கணும்னு மனசார சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு இந்த ஒரு சந்தோஷமே போதும். நாங்க லாரன்ஸ் சின்ன பிள்ளையா இருக்கும்போது ஓலை வீட்டில்தான் இருந்தோம். மழையில் வீடு எல்லாம் ஒழுகும்... அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் லாரன்ஸ் வளர்ந்து வந்தான். அதனாலயே இன்னைக்கும் அவன் எங்கே போனாலும் எளிமையாக இருக்கிறார்.
எனக்கு அதுதான் என்னுடைய பிள்ளையிடம் ரொம்ப பிடிச்சிருக்கு. அவன் எந்த இடத்தில் இருக்கும் போதும் மாறவில்லை. நான் எப்போதும் அவனிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இது போலவே எல்லோருக்கும் உதவி செய். ஆனால் அரசியலுக்கு மட்டும் வந்து விடாதே அது வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன். இப்படியே அவன் சம்பாதிக்கிறது இல்லாதவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று லாரன்ஸ் மாஸ்டரின் அம்மா கண்கலங்க அந்த பேட்டியில் பேசி இருக்கிறார் .
இதைத்தொடர்ந்து பேசிய லாரன்ஸ் அம்மா இப்படி பேசும்போது எனக்கு மேலும் கஷ்டமாக இருக்கிறது. நான் வெளியே போகும்போது பலர் என்னிடம் காட்டும் அன்பை பார்த்து நான் திகைத்து போயிருக்கிறேன். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை இந்த அன்பு மட்டும் போதும். நான் ஒரு ஊருக்கு போயிருந்த போது ஒரு அம்மா என்னுடைய வாயில் ஒரு பிடி சோறை அள்ளி திணித்தார். அப்போ என்னுடைய வாயில் மட்டுமல்லாமல் முகம் எல்லாம் சோறு ஆகிவிட்டது.
எனக்கு அவங்க சோறு ஊட்டினது மறக்க முடியாது... அதுபோல வெளியே எங்க போனாலும் எங்க வீட்டில சாப்பிடுப்பான்னுட்டு எல்லாரும் உரிமையா பேசுவாங்க. இன்னைக்கு நான் என்னிடம் இருக்கிறதை கொடுக்கிறேன். இதை பார்த்து பலரும் இதுபோல இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய ஆசை என்று ராகவா லாரன்ஸ் பேசியிருக்கிறார்.
-
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications