ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்தது.. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையும் அம்மாவும் நலமாக இருக்கிறார்கள். இந்திரஜாவின் குடும்பத்தினர் எல்லோருமே பெண் குழந்தை பிறக்கும் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த நிலையில் அவருக்கு ரோபோ சங்கர் ஆசைப்பட்ட மாதிரி ஆண் குழந்தை கிடைத்திருக்கிறது.
காமெடி நடிகராக விஜய் டிவியில் அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் காமெடி கேரக்டரிலும் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கும் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜாவிற்கு அவருடைய உறவினரான கார்த்திக் என்பவரோடு கடந்த வருடத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு ரோபோ சங்கர் மகள் இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இவர்கள் சில வாரங்கள் போட்டியாளராக இருந்தபோது இந்திரஜா கர்ப்பமாக இருப்பதால் நிகழ்ச்சியில் பாதியில் இருந்து விலகி இருந்தனர்.
அதற்குப் பிறகு தங்களுடைய குழந்தை குறித்து அடிக்கடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதுபோல சமீபத்தில் இந்திராஜாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடைபெற்றது. அப்போது ரோபோ சங்கர் தனக்கு பேரன் தான் பிறக்கப் போகிறான் என்று சொல்லியிருந்தார்.

ஆனால் ரோபோ சங்கர் மனைவி இவர் இப்படித்தான் இந்திரஜா பிறக்கும் போதும் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் பிறந்தது பெண் குழந்தை. அதுபோல இப்பொழுதும் எங்களுக்கு பேத்தி தான் பிறக்க போகிறார். எங்களுடைய பேத்திக்காக நாங்கள் பல பொருட்களை வாங்கி வைத்திருக்கிறோம்.
பெண் குழந்தை பிறந்தால் அந்த பெண் குழந்தைக்கு நகை நட்டு போட்டு அழகு பார்த்து என்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வேன். அதே நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் நாங்கள் சந்தோஷம்தான் படுவோம். ஆனாலும் ஆண் குழந்தைக்கு பெரியதாக எந்த மேக்கப்பும் செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையும் அம்மாவும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பேரன் பிறந்த நேரத்தில் ரோபோ சங்கர் கதாநாயகனாக மாறி இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications