ரோபோ சங்கர் பேசிய பகீர் உண்மை.. தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.. இந்த நிலைமைக்கு காரணம் இவர்தான்..!
சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல பிரச்சினைகள் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஆரம்ப கட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது பலமுறை தற்கொலை முயற்சி செய்ததாகவும் ரோபோ சங்கர் கூறியிருக்கிறார்.
அதுபோல அந்த நிலையில் இருந்த என்னை மீட்டுக் கொண்டு வந்த ஒரு பிரபலம் இருக்கிறார் என்றும், அவரைப் பற்றியும் பல தகவல்களை கூறியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகத்துக்கு பிரபலமான ரோபோ சங்கர் ஆரம்பத்தில் மதுரையில் படிக்கும் போது இருந்தே உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு ஆணழகன் போட்டிகளில் தேர்வாகி வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் பல மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து இப்போது முன்னணி நடிகர்களோடு வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு சில மாதங்களாக இவரைப் பற்றிய செய்திகள் தான் அதிகமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவர் கிளி வளர்த்து அதனால் ஏற்பட்ட பிரச்சனை பற்றியும், அதைத் தொடர்ந்து திடீரென்று உடல் எடை குறைந்ததால் அதனால் ஏற்பட்ட வதந்திகளாலும் ரோபோ சங்கர் அதிகமாக வைரலாகிவிட்டார்.
இந்த நிலையில் உடல் நிலை பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் ரோபோ தன்னுடைய அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நான் ஆரம்ப காலத்தில் அதிகமான தப்பான பழக்கங்களுக்கு அடிமையாகிட்டேன். அதனால் எனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தான் பெரிய அளவில் என்னை பாதித்தது. நான் டைட்டில் இருந்த நேரத்தில் எனக்கு மஞ்சள் காமாலையும் வந்து என்னை ரொம்பவே பாடாய்படுத்தி விட்டது.
அந்த நேரத்தில் நாம் பட்ட கஷ்டத்திற்கு அளவே கிடையாது. அதுவும் எனக்கு நோய் பாதித்து உடல் நிலை ரொம்ப முடியாம ஆன நேரத்துல நான் தற்கொலை முயற்சி கூட எடுத்தேன். அந்த நேரத்தில் என்னை காப்பாத்துனது என் குடும்பம் தான். அப்பல்லாம் எனக்கு ரொம்பவே கோபம் வந்து வீட்டில் அதிகமா சண்டை போட்டு இருக்கேன். மருந்து மாத்திரை எடுக்க மாட்டேன்னு கூட கத்தி இருக்கேன். வீட்டில் நிம்மதி இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டுட்டோம்..
அந்த நேரத்தில் எனக்கு நக்கீரன் கோபால் போன் செய்து என்னுடைய உடல் நிலையை அறிந்து ஒரு சித்தா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனார். ஏற்கனவே நான் அலோபதி மருத்துவம் எடுத்துட்டு இருக்கும்போது சித்த டாக்டர்கிட்டயும் கூட்டிட்டு போயி அவர் எனக்கு ரொம்பவே தைரியமா பேசினாரு. அதுபோல நான் என்ன எல்லாம் சாப்பிடலாம்னு எளிமையா சொல்லியும் தந்தாரு.
அதைத்தொடர்ந்து என்னுடைய மனைவி டாக்டர் சொன்ன மாதிரியே என்ன பாத்துக்கிட்டாங்க. அதனாலதான் நான் என்னால இப்படி மீண்டு வர முடிஞ்சுச்சு. அந்த நேரத்தில் நக்கீரன் கோபால் எதற்காக எனக்கு போன் பண்ணுனாங்கன்னு கூட தெரியல. அந்த அளவிற்கு என்ன பிடிச்சு போயி எனக்காக யோசித்து என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்காரு.
அதனால இப்ப நல்லா தானே இருக்கோம் என்று யாரும் தப்பான பழக்கங்களுக்கு அடிமையாகாதீங்க.. நான் உங்களுக்கு அட்வைஸ் பண்றேன்னு நினைக்காதீங்க. அந்த இடத்துல நான் இருக்கிறதால சொல்றேன். ஆரம்பத்தில் உடற்பயிற்சியில் அந்த அளவிற்கு உடம்பை வலுவாக வைத்திருந்த நானே சில தப்பான பழக்க வழக்கங்களால் எந்த அளவிற்கு பாடாய்ப்பட்டு வந்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கோங்க..!? இப்ப நிலைமை எல்லாம் சரியா இல்ல. யாரும் எந்த தப்பான வழியிலும் போயிராதீங்க. என்று மக்களிடம் வேண்டுகோளும் வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications