விஜய் வீட்ல இதுதாங்க நடக்குது! அவங்க மனைவி இங்கே தான் இருக்காங்க! நண்பர் சஞ்சீவ் உடைத்த விஷயம்
சென்னை: சின்னத்திரையில் திருமதி செல்வம் உட்பட பல சீரியல்களில் நடித்துப் பிரபலமான நடிகர் சஞ்சீவ், சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் தன் மனைவியுடன் கலந்துகொண்டார். அப்பொழுது, தன்னுடைய நெருங்கிய நண்பரான விஜய் மற்றும் அவருடைய மனைவி குறித்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். விஜய் பற்றிய வதந்திகளுக்கு இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
பொதுவாக, விமர்சனங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். ஒருவர் அமைதியின் சொரூபமாகத் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தாலும், அதை மற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. எப்படியாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் ஒரு கட்டத்திலிருந்து மேலே வரும்போதுதான் பலருடைய உண்மையான முகத்தையும் தெரிந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.

சாமானியர்களுக்கே இந்த நிலைமை என்றால், பிரபலமானவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைப் பற்றி வதந்திகளும், சர்ச்சைகளும் வந்துகொண்டே இருக்கும். அதுபோலத்தான், நடிகர் விஜய் பற்றியும் சில வதந்திகள் பரவி வருகின்றன. விஜய், சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். விஜய்யின் மகன் ஜோசப் இப்போது திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்து பொதுக்குழு கூட்டங்களையும் நடத்தி வருகிறார். இதுவரைக்கும் ரசிகர்களாக இருந்த பலர், இப்போது அவருடைய தொண்டர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் இவருக்கு எதிராகப் பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. விஜய் பற்றி குறை சொல்பவர்கள், விஜய் அவருடைய மனைவியுடன் இல்லை என்றும், மனைவியைப் பிரிந்துவிட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.
அதை உண்மை என்று சொல்லும் விதமாகச் சில சம்பவங்களும் நடைபெற்றன. விஜய் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அவருடைய பெற்றோர் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால் விஜய்யின் மனைவி மற்றும் குழந்தைகள் கலந்துகொள்ளவில்லை. இதனால், இந்த வதந்திகள் உண்மையாக இருக்குமோ என்று சிலர் நம்பி வந்தனர். இந்த நிலையில், விஜய் பற்றிய வதந்திகளுக்கு அவருடைய நெருங்கிய நண்பரான சஞ்சீவ், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் பதில் அளித்திருக்கிறார்.
இந்த வார சமையல் நிகழ்ச்சியில் சஞ்சீவ்வும், அவருடைய மனைவியும் ஜோடியாகக் கலந்துகொண்டனர். அப்பொழுது, அவரிடம் விஜய் குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த சஞ்சீவ், "நானும் என்னுடைய நண்பர்களும் விஜய் வீட்டிற்கு அடிக்கடி செல்வோம். அப்பொழுது அங்கு விஜய்யின் மனைவி சங்கீதா தான் எங்களுக்குச் சமைச்சு கொடுப்பாங்க. அவங்களுடைய சமையல் அருமையாக இருக்கும். நாங்கள் எல்லோரும் சிரித்துப் பேசியபடியே அந்த சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டிருப்போம்" என்று கூறினார்.
விஜய்யும் அவருடைய மனைவியும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். விஜய் தன்னுடைய குடும்பத்தை வெளி உலகத்திற்குப் பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவ்வளவுதான் என்று விஜய் ரசிகர்கள், சஞ்சீவ் பேசிய வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
-
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம்












Click it and Unblock the Notifications