அதைப் பத்தி பேச விரும்பல.. நடிகர் சஞ்சீவ் உருக்கமான பதிவு.. காரணம் இதுதானாம்.. வெளியான வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சஞ்சீவ் பெரிய அளவில் சீரியலில் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் புதியதாக சீரியலில் நடிக்க இருப்பது குறித்து வீடியோவோடு பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு உருக்கமான கேப்ஷனை சஞ்சீவ் அந்த பதிவிற்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சன் டிவியில் இவர் பல வருடங்களுக்கு பிறகு நடிப்பது குறித்து அதிகமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சஞ்சீவ் பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருந்தாலும் அவருக்கு சின்ன திரையில் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்றால் அது திருமதி செல்வம் சீரியல் தான். இந்த சீரியலில் பல வருடங்களாக இவர் கதாநாயகனாக நடித்து இருந்தாலும் சராசரியாக பல வீட்டில் ஆண்களில் கேரக்டரை இவர் தத்ரூபமாக நடித்துக் காட்டி இருப்பார். இந்த சீரியல் 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் யாரடி நீ மோகினி போன்ற சீரியலில் நடித்தார். ஆனால் அதில் தொடர்ச்சியாக அவர் நடிக்காமல் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சஞ்சீவ் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பெரிய அளவில் இவருக்கு பாசிட்டிவ் கருத்துகள் தான் அதிகமாக வந்து கொண்டிருந்தது. எந்த இடத்திலும் தன்னுடைய கேள்விகளை சரியாக இவர் கேட்டு வந்திருந்தார். ஆனாலும் அதிக நாட்கள் இவர் இந்த நிகழ்ச்சியில் நீடிக்கவில்லை.

இதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ப்ரோமோ சூட்டில் கூட இவர் இடம் பிடித்திருந்தார். அதற்கு பிறகு அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். பல்வேறு கேள்விகள் எழும்பி வந்த நிலையில் கூட அவர் இதை பத்தி நான் பேச விரும்பவில்லை என்று முடித்து விட்டார். அதுபோல நடிப்பு என்று வந்துவிட்டால் சஞ்சீவ் எவ்வளவு ரிஸ்க்குகளையும் எடுத்து நடித்து வருபவர் தான். அது அவருடைய பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும் பலரும் பார்த்து இருக்கிறார்கள்.
ஆனால் சமீப காலமாக சஞ்சீவ் எதிலும் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் கதாநாயகன் சின்ராசுவின் நண்பராக வீரசிங்கம் ஐபிஎஸ் என்ற கேரக்டரில் அறிமுகமாகி இருக்கிறார். இன்று அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அந்த புரோமோவில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சஞ்சீவ் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் பேக் டு சன் டிவி என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இதற்கு அதிகமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications