சீரியலில் வில்லி.. ஆனால் சமூக சேவையில் பரிதாபமாக போன உயிர்.. நடிகர் சஞ்சீவின் அக்கா யார் தெரியுமா?
சென்னை: சீரியல் நடிகர் சஞ்சீவின் அக்காவான சிந்து பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருந்தாலும் இவர் அதிகமான வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அவர் கொரோனா காலகட்டத்தில் பலருக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட சென்றிருந்த நிலையில் தன்னுடைய உடல் நிலையை கவனிக்காததால் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டிருக்கிறது. சிந்துவின் மரணத்திற்கு பிறகு அவருடைய மகளை தாய் மாமாவான சஞ்சீவ் தான் வளர்த்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் சஞ்சீவ் கலந்து கொண்டிருந்தபோது தன்னுடைய அக்காவை நினைத்து உருக்கமாக பேசியிருந்தார். அப்போதுதான் அவருடைய அக்கா பற்றி பல விஷயங்கள் பலருக்கும் தெரிய வந்தது. அதில் சஞ்சீவ் அக்காவும் ஒரு நடிகைதான் என்று பலருக்கும் தெரியாமல் தான் இருந்துள்ளது. அவருடைய அக்கா பிரபல நடிகை சிந்து தான். அவர் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஒரே சகோதரியான சியாமளாவின் மகன் மற்றும் மகள் தான் சஞ்சீவ் மற்றும் சித்து. தமிழில் முதல்முறையாக சித்து இணைந்த கைகள் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

முதல் திரைப்படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பட்டிக்காட்டு தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி, கிரி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அவர் இறந்த பிறகு தான் திரைக்கு வந்துள்ளது. இதுவரைக்கும் அவர் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமலலாமல் சின்னத்திரையிலும் அதிகமாக நடித்துள்ளார். அதிகமாக சீரியல்களில் அவர் வில்லி கேரக்டரில் நடித்து உள்ளார். ஆனால் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து இருந்தாலும் நிஜத்தில் இவர் ஒரு ஹீரோயினி தான்.

1995ஆம் ஆண்டு ரகுவீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். பின் இவர்களுக்கு 1996 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அதற்காக மருத்துவத்தை எடுத்துக் கொண்டு தொடர்ந்து சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டுதான் இருந்துள்ளார். ஆனால் கடைசியாக 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தையே புரட்டிப் போட்ட சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்தனர். இது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அந்த நேரத்தில் கஷ்டப்படுபவர்களுக்காக அவர் நிதி திரட்டி உள்ளார்.
தொடர்ச்சியாக அவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு தன்னுடைய உடல் நலத்தை கவனித்துக் கொள்ளாமல் விட்டு விட்டாராம். தொடர்ந்து ரெஸ்ட் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருந்ததாலும், அதிகமாக நடந்து கொண்டே இருந்ததாலும், இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருந்ததாம். அதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து உள்ளார்கள். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளார். அப்போது சித்துவின் குழந்தையான ஸ்ரேயாவுக்கு வயது 9 தானம். அக்காவின் மறைவு பெருத்த துயரத்தை கொடுத்திருந்தாலும் மருமகளை மகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு சஞ்சீவ்க்கு ஏற்பட்டுள்ளது. அக்காவின் மீது உள்ள பாசத்தால் தாய்மாமன், தந்தையாக மாறி உள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications