மறக்க முடியாத நாள்.. ராதிகாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன சரத்குமார்.. வரலட்சுமியின் ரியாக்ஷன்!
சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா தங்களுடைய திருமண நாளை இன்று (பிப்ரவரி 4) கொண்டாடும் நிலையில் சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் வரலட்சுமி எதிர்பார்க்காத ரியாக்சன் கொடுத்திருக்கிறார்.
80ஸ் காலகட்டத்தின் இறுதியில் இருந்து இப்ப வரைக்கும் முன்னணி கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கும் சரத்குமார் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பரீட்சையமானவர்தான்.

பொதுவாக சினிமாவில் ஒரு சிலர் நடிகராக இருப்பார்கள். சிலர் இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் எல்லா துறையிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதில் சரத்குமாரும் ஒருவர். தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சற்றும் குறைந்தவர் அல்ல என்று அவருடைய மனைவி ராதிகாவும் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
ராதிகாவும் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் வலம் வருகிறார். சினிமாவில் ராதிகாவுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுபோல சின்னத்திரையிலும் அவருக்கு ரசிகைகள் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.
சில வாக்குகளின் வித்தியாசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா தோல்வி அடைந்தார். ஆனாலும் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்காக பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு நடிகை வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால் சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரத்குமார் அவரை விவாகரத்து செய்து இருந்தார்.
அதற்கு பிறகு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ராகுல் என்ற மகன் இருக்கின்றார். ஆரம்பத்தில் ராதிகாவோடு அதிகமாக பேசாமல் இருந்த வரலட்சுமி இப்போது ராதிகாவை தான் புரிந்து கொண்டதாகவும் அவர் எனக்கு ஒரு நல்ல வெல்விஷ்ஷராக இருக்கிறார் என்றும் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
அதுபோல வரலட்சுமி திருமணம் கடந்த வருடத்தில் நடைபெற்ற போது சரத்குமாருக்கு பக்கத்துணையாக ராதிகாவும் முன் நின்று வரலட்சுமி திருமணத்தை நடத்தி இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையின் போது கூட வரலட்சுமி அவருடைய அம்மாவோடு ராதிகாவின் வீட்டில் பொங்கல் பங்ஷனில் கலந்து கொண்டனர். அப்போது எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று ராதிகா மற்றும் சரத்குமாரின் திருமண நாள். அதை குறித்து சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகாவோடு எடுத்த சில புகைப்படங்களை வைத்து ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் "எல்லாம் வல்ல இறைவன் நமக்கு எப்போதும் ஏராளமான மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கி அன்பின் பிணைப்பை பேணி, பாசம் மற்றும் அரவணைப்பை பேணி என்றென்றும் அமைதி பாதையில் நம்மை வழிநடத்துவராக" என்று சரத்குமார் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு வரலட்சுமி லைக் கொடுத்து இருக்கிறார்.
அதுபோல சரத்குமாரோடு எடுத்த புகைப்படங்களை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "இதுபோன்ற தருணங்கள் எப்போதும் வேண்டும்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதற்கு நடிகை சினேகா, தொகுப்பாளினி டிடி உட்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கும் வரலட்சுமி எந்த கமெண்ட்டும் கொடுக்காமல் லைக் மட்டும் கொடுத்து இருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications