நடிகர் சரத்குமார் மீது மோசடி வழக்கு.. பின்னணி காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

சரத்குமார் வாங்கிய கடன்

நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தன்னுடைய தனிப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்காக சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா என்பவரிடம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக சரத்குமார் ஒரு செக் வழங்கியதாக கூறப்படுகிறது.

Sarathkumar

ரிட்டன் ஆன செக்

ஆனால் ஸ்ரீ கிருஷ்ணா அந்த செக்கை வங்கியில் பணம் பெறுவதற்காக கொடுத்தபோது சரத்குமார் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் செக் திரும்பியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சரத்குமாருக்கு எதிராக ஸ்ரீ கிருஷ்ணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் சரத்குமார் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+