புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஜீ தமிழ் பிரபலம்.. சரத்குமார் செய்த எதிர்பாராத உதவி, இந்த மனசு தான் கடவுள்
சென்னை: நடிகர் சரத்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜீ தமிழ் பிரபலம் ஒருவருக்கு யாரும் எதிர்பார்க்காத உதவியை செய்து இருக்கிறார். அதை உதவி என்று சொல்வதை விடவும் அந்த பிரபலத்தின் நீண்ட நாள் ஆசை மற்றும் அவருடைய திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். சரத்குமார் செய்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பொதுவாக புற்றுநோய் என்பது கொடிய நோய். அதன் நோய் பாதிக்கப்பட்ட நபரை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரையும் அணு அணுவாக துடிக்க வைத்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர் படும் வேதனையை பார்க்கும் போது அவருடைய குடும்பத்தினரின் நிம்மதியும் போய்விடுகிறது. ஒரு சிலர்தான் இந்த நோயிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்று தைரியமாக போராடி ஜெயிக்கிறார்கள்.

கொடுமையான புற்றுநோய்
ஒரு சிலர் எவ்வளவோ வலி வேதனைகள் இருந்தாலும் அந்த நோயோடு இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஒருவர் தான் ஜீ தமிழ் பிரபலம் சந்துரு. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு நான்காவது ஸ்டேஜில் இருக்கிறார். இது தெரிந்ததும் அவருடைய குடும்பத்தினர் உடைந்து போயிருக்கிறார்கள். 37 வயதிலேயே இவருக்கு இந்த நோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
குழந்தையின் ஆசை
சந்துருவிற்கு மூன்று வயதில் அழகான பெண் குழந்தை இருக்கிறது. குழந்தைக்கு தன்னுடைய தந்தையின் நிலை தெரியாது. ஆனாலும் தன்னுடைய குழந்தை நாளை என்னுடைய அப்பா இந்த நோயிலிருந்து கஷ்டப்பட்டு ஜெயித்தார் என்று தைரியமாக சொல்ல வேண்டும் என்பதற்காக நான் இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று சந்துரு கூறியிருந்தார்.
தந்தையின் தன்னம்பிக்கை
அதுபோல ஒவ்வொரு சுற்றிலும் தன்னுடைய டான்ஸ் வித்தியாசமான நடிப்பையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமப நிகழ்ச்சி இரண்டும் இணைந்து மகா சங்கமம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது சந்துருக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு உதவியை சரத்குமார் செய்து இருக்கிறார்.
சரத்குமார் செய்த செயல்
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சரத்குமார் ஜாலியாகவே இருந்தார். பிறகு திடீரென்று டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சந்துரு என்று ஒரு போட்டியாளர் இருக்கிறாரே அவரை நான் பார்க்கலாமா என்று கேட்க சந்துரு மேடைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். அவரை கட்டித்தழுவிய சரத்குமார் அவரிடம், நீங்கள் தான் உண்மையான போராட்டக்காரர். உங்களுடைய டான்ஸ் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. நான் பலமுறை உங்களை பார்த்து வியந்து இருக்கிறேன்.
திறமைக்கு வாய்ப்பு
நீங்கள் இன்னும் வெற்றி பெற வேண்டும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் சின்ன வயதில் கஷ்டப்பட்டு உழைக்கும் போது என்னுடைய அப்பா நல்லபடியாக இருந்தார். ஆனால் நான் நல்ல வசதிக்கு வந்த பிறகு என்னால் சரி செய்ய முடியாத அளவிற்கு என் அப்பாவிற்கு ஒரு நோய் வந்தது. அதுதான் உங்களுக்கும் வந்திருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த நோயோடு எதிர்த்து போராடும் வலிமையில் இருக்கிறீர்கள். ஆனால் எங்க அப்பாவுக்கு அந்த வலிமை இல்லை.
படவாய்ப்பு
அந்த நேரத்தில் அந்த நோய்க்கு மருந்து இல்லை என்பதால் நான் என்னுடைய அப்பாவை இழந்துவிட்டேன். நீங்கள் எப்போதும் உங்களுடைய தன்னம்பிக்கையை விடக்கூடாது. உங்களுடைய திறமையை பார்த்து நான் வியந்து தான் உங்களுக்கு ஒரு ஆஃபர் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி தன்னுடைய அடுத்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்கிறீர்கள் என்று அதற்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். உங்களுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன் அதனால் அதற்கு வாய்ப்பு கொடுக்கிறேன்.
கனவு வெல்லட்டும்
படத்திற்கு முன்பு முதலில் ஒரு வெப்சீரிஸ் எடுக்கிறேன் அந்த வெப் சீரிஸிலும் நீங்கள் என்னோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்ல, இதை சற்றும் எதிர்பார்க்காத சந்துரு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். பிறகு சரத்குமாரிடம் நான் உங்களை ஒரு முறை கட்டிப்பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்க, தாராளமாக என்று சொல்லி சரத்குமாரும் சந்துருவை கட்டிப்பிடித்து இருக்கிறார். இந்த காட்சி இணையத்தில் பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications