Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் பொண்ணு பற்றி தப்பா பேசுனா.. தைரியம் இருந்தா நேர்ல வா.. கண்ணால பாத்தீங்களா? சரத்குமார் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் தன்னுடைய மகள் மற்றும் தன்னுடைய குடும்பத்தை பற்றி நெகட்டிவாக கருத்து வெளியிடுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டி ஒன்றில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகர் சரத்குமார் 90ஸ் காலகட்டத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து இப்ப வரைக்கும் முன்னணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய மூத்த மகள் வரலட்சுமியும் நடிகையாக மாறி இருக்கிறார். வரலட்சுமிக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. அவருடைய திருமண செய்திகள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது.

Television Varalaxmi Sarathkumar Nicholai Sachdev

ஆரம்பத்தில் இருந்தே வரலட்சுமி குறித்து அதிகமான வதந்திகளும் பரவி வருகிறது. அதற்கு அடிக்கடி இணையத்தில் வரலட்சுமி பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். தன்னை பற்றி தவறாக பேசும் இணையவாசிகளுக்கு வீடியோக்கள் மற்றும் பேட்டிகளிலும் பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனாலும் தொடர்ச்சியாக அவர் குறித்து பல வதந்திகளும் சர்ச்சைகளும் கிளம்பி வருகிறது.

சமீபத்தில் வரலட்சுமி சச்சிதேவ் நிக்கோலாயை திருமணம் செய்வதற்கு காரணம் பணம் தான் என்றும் வரலட்சுமி திருமணத்தில் சரத்குமார் 800 கோடிக்கு மேலே பணம் செலவழித்து இருக்கிறார் என்றும் சில வதந்திகள் பரவி வந்தது. இது குறித்து பதிலடி கொடுக்கும் விதமாக சரத்குமார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நானும் சமூக வலைத்தளத்தை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

சிலர் அவர்களுக்கு நேரம் போக வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களுடைய வாழ்க்கையை விமர்சித்து வருகிறார்கள். இப்படி மறைந்து இருந்து பேசுபவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது? உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும். அதை விட்டுவிட்டு தன்னிடம் இணைய வசதி இருக்கிறது என்பதற்காக என்ன வேணாலும் கமெண்ட் போடலாமா? அது என்னுடைய மகளுக்காக மட்டுமல்லாமல் நான் எல்லா பெண்களுக்காகவும் தான் பேசுகிறேன்.

யாரையாவது ஒருவரை நீங்கள் நேரில் பார்க்காமல் அல்லது கூடவே இருந்து அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் நீங்களாக எல்லாமே தெரிந்து கொண்டது போல உங்கள் மனதில் கற்பனையை வளர்த்துக் கொண்டு அடுத்தவர்களை கன்னாபின்னாவென பேசுவதற்கு உரிமை யார் கொடுத்தது. நான் பொதுவாக இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை கண்டு கொள்வது கிடையாது. ஆனால் சிலர் இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை மண்டையில் ஏற்றி மனதளவில் கஷ்டப்படுகிறார்கள்.

எதற்காக அடுத்தவர்களை இப்படி கஷ்டப்படுத்த வேண்டும்? உங்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? அப்படி எதுவுமே கிடையாது. ஆனால் எதற்காக தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களின் மனதை காயப்படுத்த வேண்டும். என் பொண்ணு கல்யாணத்தில் சிலர் அவர் பணத்திற்காக திருமணம் செய்து இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதற்கு நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை உண்மையில் எதற்காக வரலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்பது அவருடைய முடிவு. அவர் நிக்கோலாயை மனதார பிடித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவர்கள் இருவருடைய காதல் எனக்கு தெரிய வந்தபோது நான் யோசித்தது மனைவியை வைத்து ஒரு கணவனால் காப்பாற்ற முடியுமா? மனதளவிலும், பணத்தளவிலும், உடலளவிலும் வாழ்க்கையில் அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்று நான் நினைத்தேன்.

பிறகு நிக்கோலாய்யிடம் பேசிய பிறகு எனக்கு பிடித்தது. அவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் சொன்னோம். அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சிலர் தப்பு தப்பாக கமெண்ட் போட்டு அவர்களுடைய நேரத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் என்று அந்த பேட்டியில் சரத்குமார் பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+