மீனாவை இம்ப்ரஸ் பண்ண இவ்ளோ கஷ்டப்பட்டோம்..ரகசியத்தை உடைத்த சரத்குமார்.. அப்போ நடந்தது இதுதானாம்
சென்னை: சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் மீனாவோடு நடித்த அனுபவம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
நாட்டாமை திரைப்படத்தில் இடம் பெற்ற மீனா பொண்ணு பாடலுக்கு மீனா என்ன மாதிரி ரியாக்ஷன் கொடுத்தார் என்று மேடையிலே மீனாவை பற்றி ரகசியங்களை போட்டு உடைத்து இருக்கிறார்.
நடிகை மீனாவை பற்றி சரத்குமார் பேசிக் கொண்டிருக்கும்போது கீழே இருந்த ராதிகா சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்து அங்கிருந்து அனைவரும் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகம் ஆகி கிட்டத்தட்ட 40 வருடங்களாக திரை துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கதாநாயகியாக அவர் பல நடிகர்களோடு நடித்திருக்கும் நிலையில் நடிகர் சரத்குமார் உடன் ஏழு திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மீனா பற்றி சரத்குமார் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். தான் மீனாவோடு ஏழு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அனைத்துமே எனக்கு சூப்பர் டூப்பர் வெற்றி படம் தான். மீனாவோடு கம்பர் பண்ணும் போது நான் நடிப்பில் அவருடைய ஜூனியர் தான். நான் நடிக்க வந்து 37 வருடங்கள்தான் ஆகிறது. ஆனால் மீனா நடிக்க வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது.

மீனா நடிப்பு என்று வந்துவிட்டால் ரொம்பவே சின்சியராக மாறிவிடுவார். சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்தாலும் கேரக்டர் என்று வரும்போது அவருடைய நடிப்பை பார்த்து பல நேரங்களில் நானே வியந்திருக்கிறேன். நாட்டாமை திரைப்படத்தில் பாடல் காட்சி எடுக்கும் போது ஒருநாள் வந்து இன்று என்ன பாடல் என்று கேட்டார். உங்களுக்காக பாடல் தான் என்று சொல்லப்பட்டு பின்பு பாடல் ஒளிபரப்பப்பட்டதும் அப்படியே மீனா வியந்து போய்விட்டார்.
மீனா பொண்ணு பாடல் கேட்டு என்னுடைய பெயரில் பாடலா என்று அதிசயப்பட்டு போனார். மீனாவை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக நாங்க அப்படியெல்லாம் வேலை பார்த்து இருக்கோம் என்ற சிரித்தபடியே சரத்குமார் கூற கீழே இருந்த ராதிகா அதை ரசித்துக்கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் நாட்டாமை திரைப்படத்தில் அண்ணன் என்னை வீட்டை விட்டு போக சொல்லுவார் அப்போது என்னிடம் மீனா வந்து கேட்பார், நீங்க ஏன் அண்ணன் கிட்ட உண்மையை சொல்லல என்று அதற்கு நான் சொல்வேன், அண்ணன் என்கிட்ட கேட்கலையே என்று சொல்வேன். அந்த காட்சியில் மீனா அப்படியே ஒன்றி போய்விட்டார்.

அதுவரைக்கும் சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக கிண்டல் செய்து கொண்டிருந்த நிலையில் இந்த ஷாட் வைக்கும் போது ஒரே டேக்கில் அதை நடித்து முடித்து பாராட்டைப் பெற்றிருந்தார். கேரக்டரோடு அப்படியே செட் ஆகிவிட்டார். அதை பார்த்து நான் வியந்து போயிருந்தேன் என்று மீனா பற்றி சரத்குமார் பாராட்டி இருக்கிறார்.
அதற்கு மீனா ஆமாம் நான் நாட்டாமை படத்தில் என்னுடைய பெயரில் பாட்டு வரும்னு எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன்பு குஷ்பு பெயரில் பாட்டு வந்திருந்தது. அது செம ஹிட் ஆனது.அந்த வரிசையில் என்னுடைய பெயரிலும் பாட்டு என்பதை கேட்கும்போது எனக்கு செம ஹேப்பி. உள்ளே மனது குத்தாட்டம் போட்டு ஆடிக்கொண்டிருந்தது. ஆனால் அதை நான் வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்று மலரும் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications