கணவர் இறந்ததும் குடும்பத்தினர் அசிங்கப்படுத்துனாங்க! ராதிகா செய்த செயல்.. சரத்குமார் சூப்பர்! நெகிழ்ந்த அக்கா
சென்னை: நடிகர் சரத்குமாரின் அக்கா மல்லிகா ஜீ தமிழில் ஒளிபரப்பான மகா சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது சரத்குமார் தனக்காக செய்த பல விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார் . ராதிகாவும் சரத்குமாரும் இணைந்து தான் தன்னுடைய மகள் திருமணத்தை நடத்தி வைத்தாங்க என்று சில சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாகவே அக்கா தம்பி உறவு என்பது அழகானது. அது பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. ஒரு சிலருக்கு தான் அது சங்கடங்கள் ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது. அக்கா என்பவர் ஒரு தம்பிக்கு இன்னொரு அம்மாவாக இருக்கிறார். அதுபோல சில தம்பிமார்களும் தங்களுடைய அக்காவின் கஷ்டங்களை அறிந்து தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவர்களுக்காக உதவி செய்கிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகர் சரத்குமார்.

அக்கா கணவர் இறப்பு
சரத்குமாரின் ஒரே அக்கா மல்லிகாவிற்கு திருமணம் முடிந்ததும் ஐந்து மாதத்தில் கணவர் இறந்து போய்விட்டாராம். கணவர் இறந்த பிறகு அவருடைய குடும்பத்தினரே தன் கண் முன்பே அக்காவை ஒதுக்கி வைத்ததை பார்த்திருக்கிறார். அதை பார்த்து வருத்தப்பட்ட சரத்குமார் தன்னுடைய அக்காவை தன் வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். பிறகு சில மாதங்களிலேயே தன்னுடைய அக்காவிற்கு இன்னொரு திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்.
அக்காவுக்கு மறுமணம்
அவருக்கு இப்போது குழந்தைகள் திருமணம் முடிவடைந்த நிலையில் இருக்கின்றனர். இது குறித்து சரத்குமாரின் அக்கா முதல்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மகா சங்கமும் கடந்த வாரத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார்.
சரத்குமார் செய்த செயல்
அப்போது சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய அக்கா பேசி இருந்தார். அவருடைய அக்கா பேச்சைக் கேட்க கேட்க சரத்குமாரும் கண்கலங்கி அழுதிருந்தார். அதில் சரத்குமார் வீட்டில் குழந்தையாக இருக்கும்போது செய்யும் சுட்டித்தனம் போன்றவற்றை பேசி இருந்தார். சரத்குமார் வீட்டில் அவரும் அவருடைய அண்ணன் மற்றும் அக்கா இரண்டு தானாம். அவருடைய அண்ணன் இறந்து போய்விட்டாராம்.

அக்காவின் பாசம்
இப்போது சரத்குமாரும், அக்காவும் மட்டும் தான் இருக்கிறார்களாம். தனக்கு முழு சப்போர்ட் மற்றும் என்னுடைய முதல் தோழி என்னுடைய அக்கா தான் என்று சரத்குமார் கூறியிருக்கிறார். அதுபோல சரத்குமார் அக்கா மல்லிகா பேசும் போது என்னுடைய தம்பி என்னிடம் தான் அதிகமாக க்ளோசாக இருப்பான். குழந்தையாக இருக்கும்போது நான் சொல்லும் கதைகளை எல்லாம் முதல் முறை கேட்பது போல உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருப்பான்.
தம்பியின் அன்பு
நாங்கள் எல்லோரும் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது அவன் படிக்காமல் புத்தகத்தை தன்னை சுற்றி அடுக்கி வைத்துவிட்டு என்னை எந்த பூச்சியும் தாக்கி விடக்கூடாது என்பதற்காக அரண் வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான். அதையெல்லாம் நாங்கள் ரசித்திருக்கிறோம் பிறகு நடிக்கப் போகிறேன் என்பதை கூட முதல் முறை என்னிடம் தான் வந்து சொன்னான்.

ராதிகா சொன்ன வார்த்தை
என்னுடைய கணவர் இறந்த பிறகு நான் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு சோகத்திலும், கஷ்டத்திலும் இருந்தேன். அப்போது என்னுடைய நிலைமை புரிந்து என்னை வீட்டிற்கு அழைத்திட்டு வந்து எனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தான். என்னை பார்க்கும் போது ராதிகா இப்பவும் பாசமலர் என்று எங்கள் இருவரையும் கிண்டல் செய்வார். நாங்கள் அவ்வளவு பாசமாக இருப்போம்.
கண் கலங்கிய சரத்குமார்
எனக்கு ஒன்று என்றால் என்னுடைய தம்பி துடித்து போய்விடுவான். அவனுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்கவே முடியாது. சரத்குமார் என்னுடைய மனதில் நினைப்பதை எல்லாம் உடனே நிறைவேற்றி விடுவான். அவனுக்காக நான் எப்போதும் இருப்பேன் என்று அந்த நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசியிருக்கிறார். தன்னுடைய அக்கா பேச பேச சரத்குமார் கண் கலங்கி இருக்கிறார். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications