என் மகன் காதலை பற்றி சொன்னபோது விஜய் இப்படி சொல்லிட்டாரு.. சரத்குமார் உடைத்த ரகசியம்
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகன் ராகுல் நடிகர் விஜய் பற்றி தன்னுடைய சிறு வயது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். அப்போது சரத்குமார் தன்னுடைய மகனின் காதலை பற்றி வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விஜயிடம் சொன்னபோது விஜய் சொன்ன விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக பல நடிகர்கள் திரையில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்து வந்தாலும் நிஜத்தில் நண்பர்களாகத்தான் இருப்பார்கள். அது போல தான் நடிகர் சரத்குமார் தனக்கும் நடிகர் விஜய்க்கும் இருக்கும் நட்பு குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் விஜய்யோடு எனக்கு பல வருடங்களாக நட்பு இருக்கிறது. அவர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாரு.

என்னுடைய குழந்தைகளோடும் விளையாடிக்கொண்டு இருப்பாரு. ஒரு நாள் நான் வெளியே சூட்டிங் போயிருந்தேன். அந்த நேரத்தில் விஜய் வீட்டிற்கு வந்து இருந்தாரு. நான் அவர் வந்ததை தெரிந்ததும் நான் இப்ப உடனே வர முடியாதே வெளியே இருக்கிறேனே என்று சொன்னேன். அதற்கு விஜய் நான் உங்களை பார்க்க வரவில்லை நான் ராகுலிடம் கொஞ்ச நேரம் விளையாடிட்டு போகலாம் என்று வந்தேன் என்று சொல்லிவிட்டார்.
அந்த அளவிற்கு என்னுடைய மகன் ராகுலை விஜய்க்கு பிடிக்கும். அதுபோல சரத்குமாரின் மகன் ராகுல் விஜய் குறித்து பேசுகையில், ஆமாம் என்னுடைய அப்பா சொல்றது உண்மைதான். எனக்கு விஜய் சாரை சின்ன வயதிலிருந்து தெரியும். அடிக்கடி வீட்டிற்கு வருவாரு சில நேரங்களில் என்னோடு விளையாடிட்டு இருப்பாரு. ஒருமுறை என்னுடைய பிறந்தநாளுக்கு இரவு நேரத்தில் ஃபோன் வந்தது. நான் இந்த நேரத்தில் நமக்கு யார் போன் பண்றா என்று நினைத்து போனை அட்டென்ட் பண்ணுனேன்.
அப்போ என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னார். அவருடைய நம்பர் என்னிடம் கிடையாது என்பதால் நான் யார் என்று கேட்டேன். அதற்கு பிறகு தான் விஜய் சார் அவரை அறிமுகப்படுத்தினார். எனக்கு அவர் பெயரை சொன்னதும் பக்கென்று என்று ஆகிவிட்டது. அய்யோ இவரா நம்முடைய பிறந்த நாளை ஞாபகம் வைத்து நமக்காக இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்கிறாரே என்று நான் அதிசயத்து போனேன்.
அதற்கு பிறகு அவரிடம் சில நேரங்களில் பேசுவேன். அதுபோல அப்பா விஜய் சாரோட வாரிசு திரைப்படத்தில் நடிக்கும் போது நான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் இருந்தேன். அப்போது அவர் என்னிடம் நல்லா பேசிக் கொண்டே இருந்தார். என்னை பார்த்ததும் என்னடா நீ மட்டும் இப்படி வளந்துட்டே போற என்று கேட்டார். நான் அதற்கு என்ன பண்ண என்னுடைய வயசு இப்படி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தேன் என்று ராகுல் பேசியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பேசிய சரத்குமார் ஆமாம் வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் ராகுல் வந்திருந்தபோது நான் ராகுல் குறித்து விஜய்யிடம் கொஞ்சம் புலம்பிக் கொண்டிருந்தேன். ஒரு அப்பாவா அவரிடம் ராகுல் குறித்து கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருந்தேன். இந்த வயதிலேயே இவன் காதல் என்று சுற்றி கொண்டு இருக்கிறான் என்று நான் சொன்னதும், விஜய் விடுங்க சார் எல்லாவற்றையும் அவன் கத்துக்கட்டும். அதில் இருக்கும் நன்மை தீமையை அவனே புரிஞ்சிக்குவான்.
இந்த வயதில் காதல் வரதானே செய்யும். காதல் வராமல் இருந்தால் தான் தப்பு என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என்று சரத்குமார் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். காதலுக்காக நான் உயிரையே கொடுப்பேன் என்று நடிக்கும் நடிகரிடம் என் மகன் காதலிக்கிறான் என்று கம்பளைண்ட் செய்தால் இதை சொல்லாமல் விஜய் வேற என்ன சொல்லுவார் என்பது பல ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் ஆக இருப்பது இங்கே கேட்கிறது..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications