தாலியுடன் நடிகை பின்னால் ஓடிய நடிகர்.. அதுவிடுங்க, நடுரோட்டில் நின்ற சரவணன்.. சேரன் இப்படியா பண்ணாரு
சென்னை: இயக்குனர் சேரனிடம் தனக்கு ஏற்பட்ட முரண்பாடு குறித்து , நடிகர் சரவணன் சமீபத்தில் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, சரவணன் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி தந்துள்ளார்.. அப்போது சேரன்-சரவணன் இடையே நிலவிய விவகாரம் குறித்து மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சினிமாவில் உள்ளவர்கள் 90 சதவீதம் பேர், சினிமாவை விட வெளியில் நடிப்பது அதிகமாக இருக்கிறது.. ஒரு பிரபல நடிகரை பற்றி சொல்லியாக வேண்டும்..

அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், புதிய செல்போன், புதிய சிம்கார்டு வாங்கிவிடுவார்.. குடும்பத்தினர், நண்பர்களுக்காக தனி செல்போன் நம்பர் எப்போதும் வைத்திருப்பார்..
புதிய செல்போன், புது சிம்கார்டு
ஆனால், புதிய படம் ஒன்றில் கமிட் ஆகிறார் என்றாலே, அப்படத்தின் பூஜை நாளிலிருந்தே, புது செல்போன் நம்பரை வாங்கி தனியாக வைத்து கொள்வார்.. சம்பந்தப்பட்ட யூனிட்டில் யார் செல்போன் நம்பர் கேட்டாலும் தந்துவிடுவார்.. டப்பிங் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்ததுமே கடைசிநாளில் காரில் ஏறி உட்கார்ந்ததுமே, சிம்கார்டை கழட்டி வீசிவிட்டு போய்விடுவார்..
எனவே சினிமாவில் பெரும்பாலும் இப்படித்தான் இருப்பார்கள் என்பதால், எதுவுமே ஆச்சரியம் கிடையாது.. நடிகர் சரவணனை பொறுத்தவரை எல்லாருக்குமே பிடித்த நடிகர்.. விஜயகாந்த்தை ஆரம்பத்தில் பார்த்து ரஜினி மாதிரியே இருக்கிறார் என்றார்கள்.. சரவணன் நடிக்க வரும்போது, விஜயகாந்த் மாதிரியே இருக்கிறார் என்றார்கள்.. இதுவே சரணவனுக்கு பிளஸ் ஆகவும், மைனஸ் ஆகவும் இருந்தது.. விஜயகாந்த் தேதி கிடைக்காதவர்கள், சரவணனை புக் செய்ய தொடங்கினார்கள்..
கேங் லீடர் சரவணன்
சரவணன் சேலத்தை சேர்ந்தவர்.. கல்லூரில் கேங் லீடர் போல, எல்லாரையுமே வழிநடத்தி வந்துள்ளார்.. அவரது அப்பா ஒரு போலீஸ் ஆபீசர்.. சேலத்தில் அன்று பிரபலமான மந்திரியும், சரவணன் அப்பாவும் தொழில்ரீதியாக, செக்யூரிட்டி சம்பந்தமாக சந்தித்து கொள்வார்கள்.. அந்தவகையில் கல்லூரி மாணவனான சரவணனையும் அடிக்கடி அந்த மந்திரி கவனித்துள்ளார்..
அப்போதே, இளைய தளபதி என்ற பட்டத்தை சரவணனுக்கு அந்த மந்திரி தந்தார்.. அரசியலில் தளபதி என்று ஒருவர் இருப்பதால், இளைய தளபதி நீதான் என்று சொன்னாராம் மந்திரி.. அதிலிருந்து, சரவணனை காலேஜ் காலத்திலிருந்தே, இளைய தளபதி என்று நண்பர்கள் கூப்பிட ஆரம்பித்தார்கள்.. சினிமாவில் நடிக்க வந்தபோதும், இதே இளைய தளபதி பட்டம் உபயோகப்படுத்தப்பட்டது.
தாலி சென்ட்டிமென்ட்
தாலி சென்ட்டிமென்ட்டான படங்களே சரவணனுக்கு தொடர்ந்து வந்துள்ளது.. இதனால் ஒவ்வொரு நாளும் தாலியை கையில் வைத்துக்கொண்டே, ஏதாவது ஒரு கோயிலில் அலைவது போலவே இருக்குமாம்.. ஒரே மாதிரியான படங்கள், சீன்கள் சலிப்பை தந்தாலும், அதை வெளிப்படுத்த முடியவில்லையாம்.
இதற்கு பிறகுதான், டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார் டைரக்ஷனில், சூரியன், சந்திரன் என்ற படத்தில் சரவணன் நடித்தார்.. அந்த படத்தின்போது நடந்த சம்பவம் குறித்து சரவணனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்..
கேஎஸ் ரவிக்குமாருக்கும், அவரிடம் உதவியாளராக இருந்த சேரனுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு வந்துள்ளது.. வெளியே போய்விடு, முகத்தில் முழிக்காதே என்று டைரக்டர் கோபத்தில் சேரனை உரிமையில் துரத்திவிட்டாராம்..
சேரன் - கேஎஸ் ரவிக்குமார்
இதனால், சரவணனை நேரில் சந்தித்த சேரன், டைரக்டர் திட்டியது குறித்து புலம்பியிருக்கிறார்.. சரவணனும் இதுசம்பந்தமாக சேரனுக்காக சிபாரிசு செய்திருக்கிறார்..
அதற்கு கேஎஸ் ரவிக்குமார் சேரனிடம், யூனிட்டில் உள்ளவர்களுக்கு 3 நாளும் சாப்பாடு பரிமாற வேண்டும் என்று சொல்லி உள்ளார். சேரனும், புரடக்ஷனில் உள்ளவர்களுடன் சேர்ந்து 3 நாளும் செய்திருக்கிறார். இதற்கு பிறகே சேரனை மீண்டும் ரவிக்குமார் சேர்த்து கொண்டாராம். அந்த அளவில் சரவணன, சேரனுக்கு அப்போது உதவியிருக்கிறார்.
நடுரோட்டில் சரவணன்
பிறகு சில வருடம் கழித்து, சேரன் மிகப்பெரிய டைரக்டர், நடிகராகிவிட்டார்.. ஒருநாள் தன்னுடைய காரில் சேலத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென சரவணனின் கார் பஞ்சராகிவிட்டது.. உடனே பஞ்சர் போட்டு வருகிறேன் என்று டிரைவர் கிளம்பிவிடவும், சாலையில் காத்திருந்தார் சரவணன். அப்போது திடீரென காரிலிருந்து தங்கர் பச்சானும், சேரனும் இறங்கி வந்துள்ளனர்..
அப்போது 3 பேரும் பேசி கொண்டிருந்தபோது, தனக்கு படங்களில் வாய்ப்பு தருமாறு சேரனிடம் சரவணன் கேட்டுள்ளார். அதற்கு சேரன், நீங்களே பெரிய நடிகர், உங்களுக்கு நான் வாய்ப்பு தரணுமா? என்று சொன்னாராம்.. அதாவது நக்கல் தொனியில் வஞ்சப்புகழ்ச்சி அணி போல சேரன் சொன்னாராம்.. இது சரவணனுக்கு மனவருத்தமாகியிருக்கிறது.. இதைத்தான் சமீபத்தில் பேட்டியாக தந்திருந்தார்" என்கிறார் பாலாஜி பிரபு.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications