கடனை அடைக்க எளிமையான வழி.. பட்ட கஷ்டம் பற்றிய வெளிப்படையாக பேசிய சசிகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் வாங்கியாச்சு என்பதற்காக பயந்து ஓடி விட கூடாது. அதை கொஞ்சம் கொஞ்சமாக எப்படி அடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தனது வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை மிகவும் வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அதில் சசிகுமார் பேசும்போது, நான் சினிமாவுக்கு வரும்போது நடிப்பு வேறு குடும்பம் வேறு என்ற மனநிலையில் தான் இருந்தேன். நடிப்புத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வீட்டுக்குள் கொண்டு போகக்கூடாது என்று நினைத்ததால்தான் நான் வீட்டுக்கு போனாலே ஒரு ஹாலிடேஸில் நிம்மதியாக இருப்பது போன்று இருப்பேன். எனக்கு என்னுடைய குடும்பத்தினர் சப்போட்டாவும் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது.

நடிகர் சசிகுமார் பேட்டி

நாங்க கூட்டு குடும்பமாகத்தான் வாழ்ந்து வருகிறோம். அவங்க சப்போர்ட் இல்லாமல் இருந்திருந்தால் நான் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. அவங்களாலதான் நான் தைரியமா இருந்தேன். ஒரு கட்டத்தில் நான் சினிமாவிற்காக கடன் வாங்கி விட்டேன். அந்த சமயத்தில் கூட என்னுடைய வீட்டில் உள்ளவங்க சொன்ன விஷயம் நீ மொத்த கடனையும் பெருசாக பார்க்காத, அதை சின்ன சின்னதாக தனித்தனியா பாரு, இவ்வளவு தானா? என்று உனக்கு தோணும் அதை சரி பண்ணிடலாம் என்று சொன்னார்கள்.

Sasikumar actor Sasikumar director

குடும்பத்தினரின் சப்போர்ட்

அதற்குப் பிறகு என்னுடைய பார்வையும் வித்தியாசமாக மாறியது. நான் ஒரு படம் நடித்து அதில் பணம் வந்ததும் எல்லா கடனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கட்ட தொடங்கி விட்டேன். ஒரு கடனுக்கு மட்டும் மொத்தமாக அடைத்து விட்டால் மத்த கடன்காரங்களுக்கு இவன் நமக்கு பணம் தருவானா? மாட்டானா? என்று ஒரு சந்தேகம் வந்துவிடும். நம்ம மீது இருக்கிற நம்பிக்கை மட்டும் போய்விடவே கூடாது. அதனாலயே நான் பணம் கொஞசம் வந்தாலும் சரி, அதிகமாக வந்தாலும் சரி அதை எல்லா கடன்காரங்களுக்கும் சரிசமமாக கொடுத்துக் கொண்டே வந்தேன்.

அதனால் தான் என்னால் இந்த கடனில் இருந்து மீண்டு வர முடிந்தது. ஆரம்பத்தில் நான் சென்னைக்கு வந்த சமயத்தில் படத்திற்கு இத்தனை பேர் கடன் கொடுப்பாங்க என்ற விஷயமே எனக்கு தெரியாது. அப்போது படத்திற்காக நிறைய பேரிடம் கடன் வாங்கியாச்சு, ஆனால் நாம எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை, நஷ்டம் வந்துவிட்டது என்றால் உடனே நாம சொல்லாம கொள்ளாம ஊரு பக்கம் போய் விட முடியாது. அதுவும் தப்பு.

Sasikumar actor Sasikumar director

கடனை அடைக்கும் வழி

ஆனால் எல்லாரிடமும் சென்று என்னுடைய சூழ்நிலையை சொல்லி உங்களுக்கு பணத்தை கண்டிப்பாக தருவேன் என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு தான் ஊருக்கு போனேன். அதற்கு பிறகு மீண்டும் வந்து நடிக்க தொடங்கி கடனை அடைக்க தொடங்கினேன் என்று சசிகுமார் சொல்லி இருக்கிறார்.

ஆரம்பத்தில் அவர் எடுத்த படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் சில படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தது. அதனாலயே கடன்காரராக மாறிவிட்டார். அதற்காக பல படங்களில் நடித்து மொத்த கடனையும் முடித்துவிட்டார். அந்த சமயத்தில் இனி நான் கதையை தேர்வு செய்துதான் நடிப்பேன், இத்தனை நாள் எனக்கு இருந்த பண தேவைக்காக தான் நான் எல்லா படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன் என்று ஓபனாகவே சொல்லி இருந்தார்.

ஆரம்ப காலம்

மதுரையை சேர்ந்த சசிகுமார் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் ஆரம்ப காலத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து இருக்கிறார். அதற்குப் பிறகு அமீரிடம் மௌனம் பேசியதே, ராம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். 2008ல் சுப்பிரமணியபுரம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஒரே நேரத்தில் களமிறங்கினார்.

நம்பிக்கை வார்த்தை

குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதோடு இயக்குனராகவும், நடிகராகவும் அவருக்கு தனி அடையாளத்தையும் கொடுத்தது. அதன் பிறகு நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டி புலி, தாரைதப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பேட்ட, உடன்பிறப்பே என பல படங்களில் நடித்திருக்கிறார். சசிகுமார் வாழ்க்கையில் அவரது குடும்பம் சொல்லிக் கொடுத்த விஷயம் இப்போது கடனில் இருப்பவர்களுக்கும் ஒரு நம்பிக்கையான வார்த்தையாக மாறி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+