பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா விலகியது பற்றி கோபி வெளியிட்ட பதிவு.. கன்ஃபார்ம் அந்த பிரச்சனையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ரித்திகா அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

இது குறித்து ரித்திகா எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில் அந்த சீரியலில் கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் மறைமுகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று நடிகர்கள் மாறுவது புதியதல்ல. காரணம் சீரியல்கள் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில நடிகர்களால் தொடர்ச்சியாக அந்த கேரக்டரில் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது. சில நேரங்களில் பர்சனல் காரணமாக இருக்கிறது. சில நேரங்களில் சீரியல் தரப்பிலிருந்தும் இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் திடீரென்று தான் இந்த சீரியலை விட்டு விலக்கப் போவதாக கூறியிருந்தார். பிறகு அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து தொடர்ச்சியாக இவர் சீரியலை விட்டு விலக கூடாது என்று வேண்டுகோள் விடுத்து கருத்து தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து அவர் இந்த சீரியலை விட்டு விலக போவதில்லை என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் ரித்திகா திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக செய்திகள் பரவி வருகிறது. அது குறித்து ரித்திகா அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து பிக் பாஸ் பேக்ரவுண்ட் இருப்பது போன்ற ஒரு போட்டோ சூட்டையும் எடுத்து அதையும் வெளியிட்டு இருக்கிறார்.

அதனால் இவர் உடல் எடை அதிகரித்ததற்காக பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகப் போகிறாரா? அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விளக்கப் போகிறாரா? என்று பல்வேறு கேள்விகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் அமிர்தாவுக்கு மாமனார் கோபியாக நடிக்கும் சதீஷ் "எங்கிருந்தாலும் வாழ்க" என்று ரித்திகாவும் சதீஷும் சேர்ந்து சாமி கும்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதற்கு ரித்திகா," உங்களை போன்ற ஒரு சிறந்த நடிகருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி ஐயா" என்று பகிர்ந்திருக்கும் நிலையில் அப்போ ரித்திகா சீரியலை விட்டு விலகப் போவது கன்ஃபார்ம் தானா? அதனால்தான் கோபி இப்படி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறாரா? என்று பல்வேறு கேள்விகள் குவிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications