பாக்கியலட்சுமி சீரியல் முடிவு உறுதி.. ஆனால்! கோபி போட்ட போஸ்ட்! இவருக்கே இந்த நிலைமையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் சதீஷ் போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு குடும்ப தலைவியின் கஷ்டங்கள், அவமானங்கள் மற்றும் அவருடைய தன்னம்பிக்கையை மையப்படுத்தி இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பல பெண்களின் அவல நிலையை இந்த சீரியலில் காட்டுவதால் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலின் கதையில் வந்த கதையே ரிப்பீட் மோடில் இருந்ததால் அதிகமான நெகட்டிவ்களும் உருவானது. ஆனால் இப்போது சில வாரங்களாக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் எட்டு மாதங்களுக்கு பிறகு என்று கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

பாக்கியா மீது கோபத்தில் இருந்த கோபி இப்போது பாக்கியாவை புரிந்து கொண்டிருக்கிறார். அதுபோல ஈஸ்வரி கோபி மற்றும் பாக்கியா இருவரையும் மீண்டும் சேர்த்து வாழ வைக்க வேண்டும், இவர்கள் இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பாக்கியா இனி கோபியோடு சேர்ந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பாக்கியா வாழ்க்கையில் பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது அடுத்தடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக கோபி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

அதில், "எல்லோருக்கும் காலை வணக்கம். பாக்கியலட்சுமி என்ற பப்ளிக் எக்ஸாம் முடியும் நேரம் நெருங்கி விட்டது. நான் பாஸா இல்ல பெயிலா என்பது ரசிகர்கள் என்ற உங்கள் கையில் இருக்கிறது. மனதிலும் உள்ளத்திலும் சோர்வடைந்து விட்டேன். இருப்பினும் முயற்சிகள் தொடரும். ஒரு நாள் நல்ல நடிகன் என்ற இலக்கை அடைய இன்னும் என் பயணம் தொடரும்.. நன்றி வாழ்த்துக்கள்" என்று அதில் பகிர்ந்திருக்கிறார்.

ஏற்கனவே இந்த சீரியலின் கோபி கேரக்டரில் சதீஷ் பலருடைய மனதை கவர்ந்திருந்தாலும் அவருக்கு விஜய் டிவியில் எந்த விருதுகளும் வழங்கவில்லை. இது அவருடைய ரசிகர்களையும், அவரையும் அதிக அளவில் வருத்தமடைய செய்தது. அதன் காரணமாக கூட அவர் இப்படி ஃபீல் பண்ணி போஸ்ட் போட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.

நடிகர் சதீஷ் இதற்கு முன்பு எத்தனையோ சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் பாக்கியலட்சுமி சீரியலில் அவருடைய வில்லத்தனம் மற்றும் காமெடி ரசிக்கும்படி இருக்கும். ஆனாலும் ஒரு சிறந்த நடிகர் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவருக்கு அதிகமாக இருக்கிறது. கடந்த வருடத்தில் திடீரென்று சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருந்தார். அதற்கு பிறகு சேனல் தரப்பினர் மற்றும் சீரியல் தரப்பினர் இவரிடம் பேசி இவரை மீண்டும் சீரியலில் தொடர வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+