பாக்கியலட்சுமியில் அடுத்து இதுதான் நடக்கப்போகுது! பாக்யா எடுத்த உருப்படியான முடிவு! பாவம் ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அது சீரியலில் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகி பாக்கியா தன்னுடைய கணவர் தன்னை விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகும் அவருடைய குடும்பத்தினரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அதே நேரத்தில் பாக்யாவிற்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்த கோபி நெஞ்சு வலியில் துடித்த போது பாக்கியா தான் ஹாஸ்பிட்டலில் சேர்த்து உயிரை காப்பாற்றி இருக்கிறார். இப்போது பாக்யாவை கோபி புரிந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபி இரண்டாவது திருமணம் செய்த ராதிகாவோடு மீண்டும் பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அதாவது கோபியில் வீட்டை பாக்கிவிடம் விற்று விட்டார். ஆனாலும் ஒவ்வொரு மாதமும் ஒரு பிரச்சனையை சொல்லி மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறார். இப்போது தன்னுடைய வீட்டில் கோபி தங்குவதற்காக பணத்தை வாங்கிக்கொண்டு தங்குவதற்கு பாக்கியா சம்மதித்து இருக்கிறார். ஆனால் பாக்கியா எவ்வளவு உதவிகள் செய்தாலும் அவருடைய மாமியார் ஈஸ்வரியும் மகளான இனியாவும் பாக்யாவை புரிந்து கொள்ளாமல் கோபிக்கே சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

baakiyalakshmi serial vijay tv

இப்போது கூட அந்த சூழ்நிலைதான் இருக்கிறது. இந்த நிலையில் ராதிகா எனக்கு கோபி இனி நிரந்தரமாக வேண்டாம் என்று பிரிந்து விட்டார். இதனால் கோபி மனது உடைந்து மீண்டும் குடிக்க தொடங்கி இருக்கிறார். இன்றைய எபிசோடில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் இனி இந்த சீரியலில் என்ன நடக்கப் போகிறது என்ற க்ளூ கோபியாக நடிக்கும் சதீஷ் கொடுத்து இருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அதாவது ராதிகா என்னை வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டார் பாக்யாவும் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இனி நான் எங்கே போவது? என்னுடைய நண்பர் செந்தில் இருக்கிறான் என்றால் அவன் வீட்டுக்கும் போக முடியாது. அதனால் நான் என்னுடைய ஈஸ்வரி கிச்சனுக்கு வந்துவிட்டேன் என்று பெட்டிகளோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

இதனால் பாக்கியா கோபியை வீட்டை விட்டு மீண்டும் துரத்துவார் என்று தெரிகிறது. ராதிகா உன்னை விட்டு பிரிந்து போய்விட்டால் அது ஒரு கெட்ட கனவாக நினைத்து எங்க கூட சந்தோஷமா வாழு என்று ஈஸ்வரி கோபிக்கு அட்வைஸ் செய்திருக்கும் ப்ரோமோ வைரல் ஆகிவரும் நிலையில் இப்போது கோபியை பாக்கிய வீட்டை விட்டு துரத்தி உருப்படியாக முடிவெடுத்திருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

ஆனால் இதை புரிந்து கொள்ளாத ஈஸ்வரியும் இனியாவும் இனி வீட்டில் என்ன பிரச்சனை செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. இந்த சீரியலில் இனியாவின் டான்ஸ் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இப்போது ராதிகா பிரிந்து போனதே நினைத்து கோபி பீல் பண்ணிக் கொண்டிருப்பதுமா இணையத்தில் கிண்டல் செய்யப்படுகிறது. இதற்கிடையே இப்போது கோபி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.இந்த சீரியலில் வந்த கதையே வந்து ரசிகர்களை சோதனை செய்தாலும் இதை மீம்ஸ் கிரியேட்டர்களும், நெட்டிசன்களும் ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+