Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னை காப்பாத்திட்டு என் புருஷன் போயிட்டாரு.. அவர் இல்லாத வாழ்க்கை! செந்தாமரை மனைவி எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்த நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவர் பற்றியும் அவருடைய இறப்பிற்கு பிறகு தன்னுடைய நிலைமை குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

ஒரு சில நடிகர்கள் சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி வில்லனாக நடித்து பலருடைய திட்டல்களை வாங்கலாம். ஆனால் நிஜத்தில் அவர்கள் மிகவும் நேர்மையானவர்களாகவும், பாசமானவர்களாகவும் தான் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக பல வில்லன் நடிகர்களின் மற்றொரு முகம் வெளியே தெரியும் போது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

அந்த மாதிரி தான் நடிகர் செந்தாமரையின் மனைவி அவர் குறித்து பல விஷயங்களை தெரிவிக்கையில் இவரா இப்படி என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள். நடிகர் செந்தாமரை எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் நாடக கலைஞராக இருந்து பிறகு திரைப்படங்களில் அறிமுகம் ஆகி, அவருடைய கம்பீரமான குரலாலும் உடல் மொழியாளும் பலரையும் கண்களாலேயே மிரட்டி இருப்பார்.

அவரைப் பார்த்தாலே மனதிற்குள் டக்கென்று அவர் மீது கோபம் வரும் அந்த அளவிற்கு மீசையை முறுக்கிக் கொண்டு தத்ரூபமாக தன்னுடைய நடிப்பை காட்டும் செந்தாமரை நடிகை கௌசல்யாவை தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். நடிகை கௌசல்யா பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் அதிகமான சீரியலில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.

கௌசல்யா செந்தாமரையை வீட்டின் எதிர்ப்பை மீறி தான் தன்னுடைய 17 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் திருமணத்திற்கு பிறகு இருவருக்குள் அதிகமான சண்டை சச்சரவுகள் வந்தாலும் அது அன்பின் வெளிப்பாடுகள் தான் என்று
கௌசல்யா பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் கௌசல்யா பேசுகையில், ஆரம்பத்தில் என்னுடைய கணவரை பார்த்தால் எனக்கு பிடிக்காது. என்னை பார்த்தால் அவருக்கு பிடிக்காது.

முதல் முறையா நான் தேவமகன் என்ற படத்தில் ஒரு டான்ஸ்க்கு போயிருந்தேன். அப்போ அந்த படத்தில் இவரும் வில்லன் கேரக்டர் பண்ணிக் கொண்டு இருந்தாரு. அங்க தான் முதல் முறை நாங்க சந்தித்தோம். ஆனால் பெருசா அறிமுகம் கிடையாது. பிறகு சிவாஜி நாடகம் ஒன்றில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். அதற்குப் பிறகு சண்டையில் தொடங்கிய காதல் எங்களுடைய கல்யாணத்தில் முடிந்தது.

கல்யாணம் முடிந்த முதல் நாள் கூட நானும் அவரும் சண்டை போட்டோம் ஆனால் அவர் எப்போதுமே என்னை மனைவியாக நினைத்ததே கிடையாது, அவருடைய குழந்தையாக தான் என்னை நினைப்பார். என்னுடைய பெயரை சொல்லிக்கூட அவர் கூப்பிட்டது கிடையாது. எப்போதும் என்னை அம்மா என்று தான் கூப்பிடுவார். எங்களுக்கு மூன்றும் குழந்தைகள் என்னையும் சேர்த்து அவர் எனக்கு நான்கு குழந்தை என்று தான் சொல்லுவார்.

அவர் வீட்டில் இருந்தால் நான் வீட்டு வேலையே செய்ய மாட்டேன். காரணம் நான் அவரோடு உட்கார்ந்து பேசிக் கொண்டே இருப்பேன். இருவரும் என்னதான் பேசுவோம் என்றே தெரியாது. ஆனால் மணி கணக்கில் பேசிக்கொண்டே இருப்போம். சாப்பாடு செய்யவில்லை என்றால் கூட என்னுடைய கணவர் கோபப்பட மாட்டார். நான் ஏதாவது கோபப்பட்டால் உடனே என்னை சமாதானம் செய்து விடுவார். அவர் எப்போதும் கம்பீரமாக இருப்பார்.

ஆனால் ஒரு முறை எனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஹாஸ்பிடல் போனோம் அங்கு எனக்கு ஏதோ பெரிய நோய் இருக்கிறது என்று சொன்னார்கள் அப்போது அவர் கதறி அழுதார். அதை நான் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். பிறகு வீட்டுக்கு வந்து நான் செத்துப் போயிருவேனா? டாக்டர் என்ன சொன்னாங்க? என்று கேட்டேன் உடனே அவர் என்னை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தார். உன்னை நான் சாக விடமாட்டேன் என்று சொன்னார்.

என்னுடைய உடம்பில் பல நோய் இருக்கிறது ஆனாலும் நான் இன்னைக்கு உயிரோட இருக்கிறேன். என் கணவருக்கு எந்த நோயும் கிடையாது. அவர் மாரடைப்பால் இறந்து போய்விட்டார். அவர் இருந்த வரைக்கும் எனக்கு வெளி உலகமே தெரியாது. என்னை பொத்தி பொத்தி பார்த்துக் கொண்டார். அவர் இல்லாத போது தான் நான் இந்த உலகத்தையே பார்த்து மிரண்டு போனேன் என்று எமோஷனலாக அந்த பேட்டியில் கௌசல்யா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+