Actor Sri: நான் இப்போ மாறிட்டேன்.. கம்பேக் கொடுத்திருக்கிறேன்.. வெள்ளிக்கிழமை சம்பவம்! நடிகர் ஸ்ரீ பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீ சில மாதங்களுக்கு முன்பு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். இப்போது மீண்டும் தன் பழைய நிலைக்கு மாறி இருப்பதாகவும் தான் எழுதிய புத்தகம் பற்றியும் ஒரு பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ஸ்ரீ பற்றிய செய்தி சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, கனா காணும் காலங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஸ்ரீ வழக்கு எண் 16, மாநகரம், இறுகப்பற்று போன்ற பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோக்கள் தான் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து போய் இருந்தார்.

ஸ்ரீயின் மாற்றம்
அதிலும் தலைமுடி எல்லாம் நீண்டு வளர்த்து தாடியோடு இருந்ததை பார்த்ததும் இது மாநகரம் ஸ்ரீயா என்பது பலருக்கும் கேள்வி எழுப்பும் வகையில் இருந்தது. அதுபோல ஒரு தனி அறைக்குள் தானே சமைத்து சாப்பிட்டு கொண்டு இருந்த ஸ்ரீ தன்னுடைய உறவினர்கள் நண்பர்கள் என யாரிடமும் பேசாமல் தனியாக இருந்தார். தனக்கு சில திரைப்படங்களில் இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார்.
பலருடைய கூட்டு முயற்சி
அதுபோல சில ஆபாசமான வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்ததும் அவருடைய நண்பர்கள், இயக்குனர் மிஸ்கின், லோகேஷ் கனகராஜ் உட்பட ஸ்ரீ நடித்த திரைப்பட இயக்குனர்கள் ஸ்ரீ இடம் தொடர்பு கொண்டு அவரை மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி வந்தனர். அனைவருடைய கூட்டு முயற்சியால் ஸ்ரீ அவருடைய குடும்பத்துடன் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
மீண்டும் கம்பேக்
அதோடு தான் சோசியல் மீடியாவில் இருந்து சில மாதங்களாக ரெஸ்ட் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து இப்போது ஸ்ரீ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் மே ஐ கம் இன் (may I come in) என்ற ஒரு இங்கிலீஷ் நாவலை தான் எழுதியதாக அறிவித்திருந்தார். அந்த நாவல் அமேசான் தளத்தில் கிடைக்கும் என்றும் அதில் கூறியிருந்தார்.
நடிகர் ஸ்ரீ எழுதிய புத்தகம்
இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீ ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் கம்பேக் கொடுத்திருப்பதாகவும் தனக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதோடு தான் எழுதிய மே ஐ கமிங் "may I coming" என்ற புத்தகம் 220 ரூபாய் வருகிறது, அதை எல்லோரும் வாங்கி படிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இயக்குனர் கனவு
அதில் காதல், ட்ராமா, சென்சிடிவ் என எல்லா விஷயங்களும் இணைந்து இருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஸ்ரீ நடிகராக பலருக்கும் தெரிந்தாகும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவர் சினிமா இயக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தார், ஆனால் சினிமா இயக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நெடுநாள் முயற்சியாக இருந்தது என்றும் கூறியிருக்கிறார்கள். தன்னுடைய ஆசை கனவுப்படி இப்போது நாவல் எழுத தொடங்கி இருக்கும் ஸ்ரீக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications