ஸ்ரீயை ஏமாற்றிய அந்த “நடிகர்” கூப்பிட்டு வைத்து அவமானம்.. அத்தனை வீடு, கார் இருந்துச்சு! இப்போ பரிதாபம்
சென்னை: கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்து சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் ஸ்ரீ இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். இவருக்கு என்ன ஆச்சு என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நெருங்கிய தோழி ஸ்ரீயை ஏமாற்றியது ஒரு நடிகர் தான் என்று பல அதிர்ச்சிகரமான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.
சோசியல் மீடியாவில் கடந்த வாரத்தில் இருந்து நடிகர் ஸ்ரீ பற்றிய செய்திகள் தான் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. எப்படி இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டாரே என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.

ஆளே மாறிய நடிகர்
ஆரம்பத்தில் கனா காணும் காலங்கள் சீரியலில் சாக்லேட் பாயாக வலம் வந்த ஸ்ரீ அதற்குப் பிறகு வழக்கு எண் 18,மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய ஒவ்வொரு படங்களிலும் அவருடைய நடிப்பு தனித்துவமாக இருக்கும். ஆனால் இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தலைமுடியின் கலரை மாற்றி முகத்தில் தாடி வளர்த்து ஒல்லியான தேகத்தோடு அவர் போடும் வீடியோக்கள் காண்பவர்களை கண் கலங்க வைத்திருக்கிறது.
தோழியின் வருத்தம்
இவருடைய நிலைமைக்கு என்ன காரணம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதற்கு ஸ்ரீயின் நெருங்கிய தோழியான டோட்டி டேவிட் என்பவர் எமோஷனலாக பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது நானும் ஸ்ரீயும் பல வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். இப்போது அவருடைய புகைப்படங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
தனிமை
எங்களுக்கு இது பெரிய அதிர்ச்சி. நாங்கள் எப்படியாவது ஸ்ரீயிடம் பேச வேண்டும் என்று கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். என்னுடைய இரண்டு நம்பரில் இருந்து ஸ்ரீக்கு போன் செய்தாலும் அதை எடுக்கவில்லை. எனக்கு பிரச்சனை அதனால் எனக்கு உதவி செய் என்றும் நான் கெஞ்சி பார்த்தேன் அதற்கு பிறகும் அவன் என்னிடம் பேசுவதற்கு விரும்பவில்லை. என்னுடைய நம்பரை பிளாக் செய்துவிட்டார். நான் என்னுடைய அம்மா நம்பரில் இருந்து போன் செய்தேன் அதையும் கூட எடுக்கவில்லை.
குடும்பத்தின் கஷ்டம்
இப்போதுதான் ஸ்ரீ பற்றி எல்லோரும் பேச தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சில மாதங்களாகவே எப்படியாவது பேச வேண்டும், அவரை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஸ்ரீக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஸ்ரீ பல ஏமாற்றங்களை சந்தித்து இருக்கிறார். அவருடைய குடும்பம் நல்ல வசதியாக வாழ்ந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்களே அதுபோலத்தான் அவருடைய குடும்பம் ஆகிவிட்டது.
ஆரம்ப காலம்
கனா காணும் காலங்கள் சீரியலுக்கு நடிக்க வரும்போது ஸ்ரீ காரில் தான் வருவார். அவ்வளவு செல்லமாக இருந்தார். அப்போது அவங்களுக்கு இரண்டு சொந்தமான வீடு இருந்தது. அதற்குப் பிறகு ஸ்ரீ திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய அப்பாவிற்கு பிசினஸ் லாஸ் ஆகிவிட்டது, பிறகு சொந்த வீட்டை எல்லாம் விற்க வேண்டிய நிலைமை வந்தது. ஆரம்பத்தில் ஸ்ரீ வழக்கு எண் 18 திரைப்படத்தில் புரோட்டா போடும் கேரக்டரில் நடித்திருப்பார் அதை கற்றுக் கொள்வதற்காக 45 நாள் ட்ரைனிங் எடுக்க போயிருந்தார். அப்போ கூட காரில் தான் போனார்.
குடும்ப நிலைமை
ஆனால் அதற்கு பிறகு அவருடைய நிலைமையே மாறியது. எல்லோருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனாலும் இதை எல்லாம் தாண்டி ஸ்ரீ வருவான் என்று நம்பினோம். சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டிற்கு ஸ்ரீயின் குடும்பத்தினர் மாறினார்கள். ஸ்ரீயை அவருடைய குடும்பத்தினர்கள் அவ்வளவு செல்லமாக பார்த்தார்கள். பிறகு அவருடைய குடும்பம் கஷ்டப்படுவதையும் ஸ்ரீ பார்த்தார்.
நண்பரின் ஏமாற்றம்
அதேபோல சினிமாவிலும் அவருக்கு பல ஏமாற்றங்கள் நடந்தது. அவருடைய நெருங்கிய நண்பர் செய்த ஏமாற்றமும் ஸ்ரீக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்தது. ஒரு பெரிய ஹீரோவின் பிரண்டு கேரக்டரில் ஸ்ரீக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் கண் முன்பே அவருடைய பிரண்டுக்கு அந்த வாய்ப்பு போய்விட்டது. அதை கடைசி வரைக்கும் அவருடைய ஃப்ரெண்ட் ஸ்ரீயிடம் சொல்லவே இல்லை. அந்த நடிகர் இப்போ பெரிய பிரபலமாக இருக்கிறார். அது ஸ்ரீக்கு ஏமாற்றம் அதேபோல நானும் ரௌடி தான் திரைப்படத்திலும் முதலில் ஸ்ரீ தான் நடிப்பதாக இருந்தது.

திரைப்பட வாய்ப்பு பறிப்பு
அவரிடம் பேச்சுவார்த்தை எல்லாம் முடித்து ஸ்கிரிப்ட் சொல்லி விட்டார்கள். அவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி நடிக்க இருந்தார்கள். விக்னேஷ் சிவனிடம் கூட ஸ்ரீ பேசிவிட்டு வந்திருந்தார். ஆனால் கடைசியில் அந்த கதையையும் அப்படியே மாற்றி விட்டார்கள். அதுபோல அவர் நடித்த திரைப்படங்களுக்கான சம்பளமும் அவருக்கு கிடைக்கவில்லை இதுவெல்லாம் தான் அவரை மன அழுத்தத்தில் தள்ளிவிட்டது. எங்களிடமும் பேசுவதற்கு மறுத்துவிட்டார்.
நண்பரின் வருத்தம்
இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது கூட அவர் மன அழுத்தத்திற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதற்காக ட்ரீட்மென்ட் எடுத்தபடி தான் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதும் இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவர்களுடைய நண்பர்களிடமும் சொல்லி இருந்தார். இப்போது அவர் தனி அறையில் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவருடைய குடும்பத்தினரும் கஷ்டப்படுகிறார்கள். அவரிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஸ்ரீயின் மனநிலை மொத்தமாக மாறி இருக்கிறது. அது எங்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவர் பற்றி சில தப்பான தகவல்களும் பரவி வருகிறது என ஸ்ரீயின் தோழி வருத்தப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications