சிங்கம் புலி மனைவி கர்னல்.. கார்கில் வாரில் செய்த செயல்! வெங்கடேஷ் பட் கேட்ட கேள்வி.. உடைபட்ட உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிங்கம் புலி தன்னுடைய மனைவி குறித்து டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னுடைய மனைவி ராணுவத்தில் கர்ணலாக இருக்கிறார் என்றும் அவருடைய கடினமான பணிகள் குறித்து பேசி இருக்கும் நிலையில் அவருக்கு டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் சல்யூட் அடித்து பாராட்டப்பட்டது.

நடிகர் சிங்கம் புலி தன்னுடைய மாமன் பொன்னை தான் திருமணம் செய்து இருக்கிறாராம். அவர்களோட பூர்வீகம் அந்தமான் இப்போது ஆர்மியில் கர்ணலாக இருக்கிறார். இது குறித்து நேற்று டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் சிங்கம் புலியிடம் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் உங்களுடைய பேட்டிகளை பார்த்தேன். பயங்கர எமோஷனலாக இருந்தது. உங்க வீட்டு தலைவிக்கு இந்த நாட்டு தமிழ் மக்களின் சார்பாக ஒரு சல்யூட்..

Actor Singam Puli

நீங்க கல்யாணம் பண்ணும் போது அவங்க கேப்டனாக இருந்து இப்போ அவங்க நாட்டை காப்பாத்துற உன்னதமான செயலை செய்துட்டு இருக்காங்க. உங்களுடைய மனைவி பற்றி சொல்லுங்க என்று வெங்கடேஷ் பட் சொன்னதும் சிங்கம் புலி தன்னுடைய மனைவி குறித்து பேசுகிறார். அதில் கார்கில் வாரில் என்னுடைய மனைவி இருந்திருக்காங்க.

அதில் அந்த ஜோல்சர்ஸலுக்கு எல்லாம் பங்கரில் இருப்பாங்களா அப்படி 60 நாட்கள் தொடர்ந்து அதில் அவர் வேலை செய்திருக்கிறார். அது முடிச்சதுக்கு அப்புறம் ஜனாதிபதி, குடியரசு தலைவர் எல்லாரும் அந்த கார்கில் போரில் ஒர்க் பண்ணுவதற்காக அவர்களிடம் உங்களுக்கு என்ன வேணும்னு சாய்ஸ் கேட்டிருக்காங்க... அப்போ இவங்க என்ன வேணாலும் கேட்டிருக்கலாம், அதை அவங்க நிறைவேற்றி இருப்பாங்க...

இடம் வேண்டும் என்று, பெட்ரோல் பங்க்... இப்படி என்ன வேணும்னாலும் கேட்டு இருக்கலாம். ஆனா என்னுடைய மனைவி எங்க அம்மா அப்பா கூட இருக்கணும் ஹோம் பிளேயர்க்கு போகணும்னு கேட்டிருக்காங்க. என்னுடைய மனைவியின் ஊர் அந்தமான் என்பதால் அவருக்கு அங்கே ஐந்து வருடங்கள் தன்வந்திரி ஹாஸ்பிடலில் வேலை பார்த்தாங்க. அது முடிந்ததற்கு பிறகு நாங்க திரிபுரா போனோம்.

அங்கிருந்து பூனே, அதற்குப் பிறகு ராஞ்சி, டேராடோ, ஹைதராபாத் இப்போ ஜபல்பூர் என்று பல இடங்களுக்கு மாறி இருக்கிறார். இப்போ என்னுடைய மனைவி கர்ணலாக இருக்கிறாங்க... என்று சிங்கம்புலி சொன்னதும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் எல்லோரும் சல்யூட் அடித்திருக்கின்றனர். இந்த வீடியோ அதிகமாக இணையத்தில் பகிரப்படும் நிலையில் பலரும் சிங்கம்புலியின் மனைவியை பாராட்டி வருகிறார்கள்.

நடிகர் சிங்கம் புலி பல திரைப்படங்களில் உதவி இயக்குனர், கதை ஆசிரியர், இயக்குனராகவும் இருந்தாலும் இதுவரைக்கும் காமெடி நடிகராகவே நடித்து வந்த நிலையில் முதல் முறையாக மகாராஜா திரைப்படத்தின் மூலமாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். இது ஒரு பக்கம் பாராட்டுகளையும் மற்றொரு பக்கத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

நடிகர் சிங்கம்புலி பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி, அதற்கு பிறகு ரெட், மாயாவி படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார். ஆனாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு கிடைக்கத் தொடங்கியது.

அந்த படத்தில் குழந்தை போல சாக்லேட் சாப்பிட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சிங்கம்புலியை யாராலும் மறந்து இருக்க முடியாது. அதிலும் தன்னுடைய அப்பாவான ஜி எம் குமாரிடம் அப்பா நீ செத்தா இந்த கட்டில் எனக்கு தானே? என்று கேட்பது, பிறகு எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது நீங்க எல்லாம் மாடு முட்டிதான் சாகப் போறிங்க என்று சாபம் கொடுப்பது போன்ற பல இடங்களில் இவருடைய தனித்துவமான நடிப்பால் பலருடைய மனதையும் கவர்ந்திருந்தார்.

அதற்குப் பிறகு நடித்த படங்களில் எல்லாம் சிங்கம்புலி காமெடி கேரக்டரிலேயே நடித்து வந்திருந்தார். ஆனால் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜாவில் தான் அவர் பாலியல் வன்புணர்வு செய்பவராக நடித்திருக்கிறார். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தான் இருந்து வருகிறது. படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் ஏன் சிங்கப்புலி இப்படி செய்து விட்டார் என்பதுதான் கேள்வியாக வைத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+