அது இது எது நிகழ்ச்சி டூ பாக்ஸ் ஆபீஸ் நடிகன்! சிவகார்த்திகேயன் சாதித்தது எப்படி?
தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் சிவகார்த்திகேயன், இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார். ஒரு சின்ன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த இவர், இன்று பாக்ஸ் ஆபீஸில் வெற்றி அளிக்கும் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சாதாரணமாக நடைபெறவில்லை. 2007-ஆம் ஆண்டு "கலக்கப்போவது யாரு" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நையாண்டி மற்றும் நேர்த்தியான பேச்சுத் திறமையால் கவனம் பெற்றார். குடும்ப ரசிகர்களின் பிடிப்பான நகைச்சுவை நடுநிலை நாயகனாக மாறினார்.
சினிமா அறிமுகம் மற்றும் வளர்ச்சி
2012-ஆம் ஆண்டு மெரினா திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவரது தோற்றம் சாதாரணமானது, அவரின் உடல் மொழி, சினிமாவுக்கே ஒப்பானது இல்லை என விமர்சனங்கள் இருந்தாலும், "எதிர்நீச்சல்", "மான் கராத்தே", "காக்கி சட்டை" போன்ற வெற்றிப்படங்களால் அவர் தனது தன்னம்பிக்கையையும், திரையில் வெற்றி பெறும் திறமையையும் நிரூபித்தார்.
தொடர்ந்த பயிற்சி, உழைப்பு மற்றும் குரூப்புகளுக்கு அப்பால் தனக்கென ஓர் அடையாளம் கண்டெடுத்தார். நகைச்சுவை, காதல், குடும்பம், மற்றும் காமெடியில் தனிப்பட்ட முத்திரை பதித்தவர், "ரெமோ", "வேலைக்காரன்", "நம்ம வீட்டு பிள்ளை", "அயலான்" போன்ற படங்களில் பன்முக தன்மையை வெளிப்படுத்தினார்.
சிறப்பான எழுச்சி
தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர் கொண்ட ஹீரோக்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித். இந்த வரிசையில் தற்போது ரசிகர்களிடையே அடுத்த வரிசையில் உள்ளது சிவகார்த்திகேயன்.
தொடக்கத்தில் ஒரு நகைச்சுவை நடிகராக வந்த இவர், இன்று பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங்கை கொண்டாட வைக்கும் ஹீரோவாக வளர்ந்துள்ளார். இது சின்னதாகத் தோன்றலாம், ஆனால் ஒரு நடிகனின் வெற்றிக்கான மிக முக்கியமான அடையாளம் - 'ஓப்பனிங் பவர்'.
விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்கள் பயணத்தின் ஆரம்பத்தில் பல படம் பண்ணி பின்னர் தான் மாஸ் ஹீரோக்களாக மாறினர். ஆனால் சிவகார்த்திகேயன் அந்த பாதையை தாண்டி, குறைந்த படங்களில் தன்னிறைவை வளர்த்து, தேர்ந்த கதைகளுடன் ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றவர். இது அவருடைய உழைப்பையும், முடிவெடுக்கும் திறமையையும் காட்டுகிறது.
ஓப்பனிங் பவரின் ஆதாரம்
'டாக்டர்', 'டான்', 'மாவீரன்', 'அமரன்' போன்ற படங்களுக்கு கிடைத்த முதல் நாள் வசூல்களே போதும், சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எவ்வளவு உயர்ந்துவிட்டது என்பதற்குச் சாட்சி. பெரும் பிரபல ஹீரோக்கள் படங்களுக்கு கிடைக்கும் அளவிலான ஓப்பனிங், தற்போது இவருடைய படங்களுக்கும் கிடைக்கிறது.
ரசிகர் வரவேற்பு - நாளுக்கு நாள் அதிகரிப்பு
இன்றைய சமூக ஊடக காலத்தில், ரசிகர்கள் நேரடியாக நடிகரை பின்தொடர்கிறார்கள். இதனால் அவர்களுடைய வளர்ச்சியும், வீழ்ச்சியும் உடனே தெரிகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் குறித்து பார்க்கும்போது, மன்றங்கள், சோஷியல் மீடியா பக்கம், டிரெண்டிங்குகள், அவருக்கு முன்னிட்டு செய்யப்படும் நிகழ்ச்சிகள், பட்டங்கள் போன்றவை அவரது வலிமையான ரசிகர் அடிப்படையை காட்டுகின்றன.
அவர் எந்த ஓரமாக இருந்தாலும், நகைச்சுவையும் நெஞ்சை உருக்கும் உணர்ச்சிகளும் கலந்த கதைகளைத் தேர்வு செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பிடித்த நடிகராகத் திகழ்கிறார். விஜய், அஜித் போன்ற ஹீரோக்களுக்குப் பிறகு குடும்ப ரசிகர்களை உறுதி செய்யும் ஹீரோ என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
விஜய் - அஜித் எனும் மாஸ் ஹீரோக்கள் வரிசையில், இப்போது "மூன்றாவது நபராக" புகழ் பெறும் நபர் சிவகார்த்திகேயன் என்பதில் சந்தேகமில்லை. ஒரு இடத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அந்த இடத்தை தக்க வைத்து கொள்ள உழைத்து கொண்டே இருக்க வேண்டும். இவை ரெண்டுமே சிவகார்த்திகேயனிடம் ஆரம்ப நாள் முதல் உள்ளது.
அடுத்த கட்டமாக அவர் பொன்னியின் செல்வன் மாதிரி பீரியட் படமோ, பான்-இந்தியா முயற்சியோ செய்வாரா என எதிர்பார்ப்பு இருக்கிறது.
- குரு கிருஷ்ணன்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications