ஆட்டோவில் ஜாலி ரைடு போன சிவகார்த்திகேயன் பட ஹீரோயினி.. வசமாக சிக்கிட்டாரே? அதுவும் யார் தெரியுதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் எவ்வளவு பிரபலமான நடிகையாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் சாதாரண மனிதர்களைப் போல சில நடிகைகள் வாழ்வது ரசிகர்களை கவர்கிறது. அந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை ஸ்ரீ திவ்யா. கருப்பு மாஸ்க் அணிந்தபடி எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் ஆட்டோவில் பயணம் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

மாஸ்க் போட்டா யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க என்று நினைத்தாரோ என்னவோ ஆனால் ரசிகர்களின் கண்களில் இருந்து தப்பிக்க முடியவில்லை. கருப்பு மாஸ்க்கில் சிம்பிளான உடை, மேக்கப் இல்லாத இயல்பான தோற்றம் என ஸ்ரீ திவ்யா ஆட்டோவில் வந்திருந்தாலும் அவருடைய சின்ன ரியாக்ஷனால் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்டார்.

ரசிகர்கள் கருத்து

அவருடைய வீடியோவை பார்த்த சில ரசிகர்கள் எவ்வளவு பெரிய நடிகை ஆனாலும் ஆட்டோவில் சாதாரணமாக பயணம் பண்ணுறாங்க? இதுதான் உண்மையான எளிமை என்று பாராட்டி வருகிறார்கள். சிலர் வழக்கம் போல கலாய்க்கவும் தவிரவில்லை. முகத்தை எப்போதும் மாஸ்க் போட்டு மூடாதே.. ( முகத்தை எப்போதும் மூடி வைக்காதே என்ற பாட்டு வரிகளில் படிக்கவும்) என்று கமெண்ட்களில் பாடல் வரிகளால் ரெக்யூஸ்ட் வைக்கின்றனர். இப்படி சில ரசிகர்கள் ரெக்வஸ்ட் வைத்துக் கொண்டிருக்கும் போது சில ரசிகைகளோ உங்க சிரிப்புதான் ஃபேவரைட் . ஆனா நீங்க மாஸ்க் போட்டாலும் அந்த கண்களை பார்த்தாலே ஸ்ரீ திவ்யா என்று தெரிஞ்சிருச்சு என்று ஜாலியாக கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

Sri Divya Sivakarthikeyan

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா தமிழில் 2013இல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த லதா பாண்டி கேரக்டர் ரசிகர்களிடம் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்து விட்டது. முதல் படத்தை அவருக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் வாங்கி கொடுத்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிக்கு பிறகு ஜீவா, வெள்ளக்காரத்துரை, காக்கிச்சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், மருது, சங்கிலி புங்கிலி கதவ திற, மெய்யழகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குடும்ப பாங்கான தோற்றம், இயல்பான நடிப்பு, குறும்பான முகப்பாவணை ஸ்ரீதிவ்யாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கின. கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரை அதிகம் தேர்வு செய்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Sri Divya Sivakarthikeyan

நடிகை ஸ்ரீ திவ்யா பூர்வீகம்

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீதிவ்யா சினிமாவுக்கு வெளியேவும் மிக அமைதியான வாழ்க்கையை விரும்புபவர் என்று பல பேட்டிகளிலும் பேசி இருக்கிறார். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை விரும்பும் இவர் அதிகமாக தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்காத நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். சோசியல் மீடியாவில் அதிகமாக ஆக்டிவாக இல்லாமல் இருந்தாலும் எப்பவாவது புகைப்படங்கள் மற்றும் அப்டேட்டுகளை பகிர்ந்து வருகிறார்.

யாருக்குத்தான் துரோகம் நடக்கல? இமான் சொன்ன ஒரே வார்த்தை! மீண்டும் கிளம்பிய சிவகார்த்திகேயன் சர்ச்சை
சினிமா நட்சத்திரங்கள் விலை உயர்ந்த கார்களில் மட்டுமே பயணம் செய்வார்கள் என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில் ஸ்ரீ திவ்யா எந்த பந்தாவும் இல்லாமல் ஆட்டோவில் பயணம் செய்த காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+