“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த நடிகர் சிவக்குமார் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வாழ்க்கை, குடும்பம், குறிப்பாக பெற்றோர்கள் பற்றிய அவரது பேச்சு பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

Sivakumar Tamil Cinema

நடிகர் சிவகுமார் பேச்சு

நடிகர் சிவகுமார் எப்போதுமே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் அதுபோலத்தான் இப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், அவர் மிகவும் உணர்ச்சிகரமாக ஒரு விஷயத்தை சொல்லியுள்ளார். "நீங்கள் எவ்வளவு பெரிய அளவில் சம்பாதித்தாலும், உங்களைப் பெற்றெடுத்து வளர்த்த தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டால், அந்த பாவம் உங்களை சும்மா விடாது.

வாழ்க்கையின் இறுதி வரை அது மனசாட்சியாகத் துரத்தும். பெற்றோர்களை கடைசி வரை பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் கடமை" என்ற அவரது வார்த்தைகள், பலரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கருத்து வெளியானதும், சமூக வலைத்தளங்களில் அதைப் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பெற்றோர்களை தனியாக விட்டுவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிற சூழலில், சிவகுமார் கூறிய இந்த வார்த்தைகள் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேலும் சிவகுமார் பேசும் போது, எங்க வீட்டில் எங்க அம்மா வாழ்ற வரைக்கும் அவங்கள ராணி மாதிரி பார்த்துகிட்டோம், எங்களை கஷ்டப்பட்டு ஆரம்ப காலத்தில் வளர்த்தாங்க. நாங்க சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அவங்க தான் எங்க வீட்டு ராணி.

எங்க வீட்டில் எந்த முடிவாக இருந்தாலும் அவங்க கிட்ட கேட்டு, அவங்க சம்மதித்த பிறகு தான் எடுத்தோம். சாப்பாடு செய்வதிலிருந்து பிள்ளைகளுக்கு எந்தவொரு நல்லது செய்றது என்றாலும் அம்மாவிடம் கேட்டு தான் நடக்கும். வீட்டின் சாவி அம்மாவிடம் எப்போதும் நிலைத்திருந்தது. அதனால் நாங்கள் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. மேலும் மேலும் வளர்ந்து கொண்டு இருந்தோம். பெற்றோரை தவிக்க விடாமல் அவர்களைப் பார்த்துக் கொள்வதுதான் நாம செய்ற பெரிய புண்ணியம் என்று சிவக்குமார் தன்னுடைய வீட்டு சூழ்நிலையை சொல்லி பலருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து

ஒரு பக்கம் இந்த கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். "பெற்றோர்களின் தியாகத்தை மறக்கக்கூடாது", "இது உண்மையான வாழ்க்கை பாடம்" என்று சிலர் பாராட்டுகின்றனர். அதே நேரத்தில், இளம் தலைமுறையினர் கூட "இது சிந்திக்க வைக்கும் கருத்து" என்று ஏற்றுக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிவக்குமார் சர்ச்சை பேச்சு

ஆனால் இதே சமயம், சமீபத்தில் சிவகுமார் கூறிய மற்றொரு கருத்தும் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, "வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி... ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி..." என்று அவர் கூறிய ஒப்பீடு பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த பேச்சு பெண்களை குறைத்து மதிப்பிடுவது போல உள்ளது என்று பலர் விமர்சித்தனர்.

இதற்கு குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். "நடிகைகளுக்கும் குடும்பம் இல்லையா? பெண்களை இப்படிச் சித்தரிப்பது சரியா?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த விமர்சனமும் அப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

இந்த இரண்டு சம்பவங்களும் சேர்ந்து பார்க்கும்போது, சிவகுமார் பேசும் ஒவ்வொரு கருத்தும் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே தெளிவாகிறது. ஒருபுறம் அவர் கூறும் வாழ்க்கை அறிவுரைகள் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, மறுபுறம் சில கருத்துகள் சர்ச்சையையும் உருவாக்குகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+