வீரமணி பற்றி அப்பவே தனது புத்தகத்தில் எழுதிய நடிகர் சிவகுமார்.. இப்போ வந்தாச்சு சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் நடிகர் சிவகுமாரின் சுயசரிதையில் இடம் பெற்று இருந்த ஒரு பழைய சம்பவம் இப்போது சோசியல் மீடியாவில் மீண்டும் கவனம் பெற்று வருகிறது. அதில் தனது அம்மாவின் நினைவாக சமாதி அமைக்க தன் நண்பர் ஜெம் வீரமணி உதவியதாக சிவகுமார் நன்றி உடன் குறிப்பிட்டிருக்கிறார்.

Actor Sivakumar veeramani

ஜெம் வீரமணி யார்

வீரமணி யார் என்றால் பல ஆண்டுகளாக கிரானைட் தொழிலில் முக்கியமான தொழிலதிபராக பிரபலமானவர். தற்போது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால் அவரைப் பற்றிய பழைய தொடர்புகள், நட்பு வட்டம் உள்ளிட்ட பல விஷயங்களும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் சிவகுமாரின் புத்தகத்தில் வீரமணி பற்றி எழுதிய அந்த பக்கமும் பலர் கவனத்திற்கு வந்திருக்கிறது.

சிவகுமார் தனது சுயசரிதையில் தன்னுடைய தாயார் மறைந்த காலத்தை பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக எழுதி இருக்கிறார். அந்த நேரத்தில் அரசியல் மற்றும் சினிமாக்கு துறையை சார்ந்த பலரும் தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு அம்மாவின் முதல் ஆண்டு நினைவு நாளில் நடந்த ஒரு விஷயத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.

Actor Sivakumar veeramani

சிவக்குமார் எழுதிய வார்த்தை

அதாவது சென்னை கண்ணம்மாபேட்டையில் தனது அம்மாவுக்காக கருப்பு கிரானட்டில் சமாதி அமைக்கப்பட்டதாகவும், அதை தனது நண்பர் ஜெம் கிரானைட் வீரமணி இலவசமாக செய்து கொடுத்ததாகவும் சிவகுமார் எழுதி இருக்கிறார். அந்த சமாதியில் தனது தாயை நினைத்து சில வார்த்தைகளையும் சிவக்குமார் செதுக்கியுள்ளதாக அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் வீரமணி தொழிலதிபர் என்று அடையாளத்தோடு மட்டுமல்லாமல் சினிமா, இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தவர்.

போக்சோ வழக்கு

சிவகுமார் தனது புத்தகத்தில் அவரை நண்பர் என்று குறிப்பிட்டு தனது குடும்பத்துக்கு அவர் செய்த உதவியை மட்டுமே அந்த சம்பவத்தின் பின்னணியில் பதிவு செய்துள்ளார். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. 2025 அக்டோபரில் கிடைத்ததாக கூறப்படும் ஒரு வீடியோவை அடிப்படையாகக் கொண்டு வீரமணிக்கு எதிராக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Actor Sivakumar veeramani

மீண்டும் விசாரணை

ஆரம்பத்தில் அந்த வீடியோ கிளாரிட்டியாக இல்லை என விசாரணையை முடிக்க போலீசார் முயன்ற நிலையில், சிறப்பு நீதிமன்றம் அந்த முடிவை ஏற்காமல் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அந்த வீடியோவில் இருப்பதாக கூறப்படும் சிறுமியும் பின்னர் அடையாளம் காணப்பட்டு நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+