ஜீ தமிழ் பஞ்சமி குழந்தைகளுக்கு தாய்மாமனாக காது குத்திய நடிகர் சூரி! நெகிழ்ந்த கள்ளக்குறிச்சி!
கள்ளக்குறிச்சி: ஜீ தமிழ் சேனலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பஞ்சமியின் குழந்தைகளுக்கு காது குத்துவதாக நடிகர் சூரி வாக்களித்திருந்த நிலையில் அதை ஒரே வாரத்தில் இன்று நிறைவேற்றியுள்ளார். ஆம்! பஞ்சமியின் மூன்று குழந்தைகளுக்கும் தாய்மாமனாக இருந்து காது குத்தி சீர் செய்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் எனும் நடன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பஞ்சமி என்பவர் கலந்து கொண்டு நடனமாடுகிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவி. இவர்களுக்கு தர்ஷித், அசோகமித்ரன், ஆதித்ய வர்மா ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். பஞ்சமி ஆரம்பத்தில் சூரிய வம்சம் படத்தில் இடம்பெற்ற சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடுவராக இருக்கிறார். அவர் தனது தந்தையிடம் பஞ்சமியின் திறமையை சொல்லியிருந்தார். அவரும் வீடியோவில் தோன்றி பஞ்சமிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். மேலும் தனது வீட்டிற்கு வர வேண்டும் என அழைத்திருந்தார்.
பஞ்சமி
அதன்படி பஞ்சமியும் அவரது கணவர், குழந்தைகளும் சரத்குமார் வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கு ராதிகாவும் சரத்தும் அவர்களை வரவேற்று, மதிய உணவு பரிமாறினர். பல தருணங்களில் சரத்குமாரே இவர்களுக்கு பரிமாறிய நெகிழ்ச்சி தருணமும் நடந்தது.
சரத்குமார்
சரத்குமார் பெரிய நடிகராக இருக்கும் போதிலும் விருந்தோம்பலில் எந்த குறைவும் இல்லாத அளவுக்கு நடந்து கொண்டதாகவே சமூகவலைதளங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில் மாமன் படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் சூரி, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
பஞ்சமியின் நடனம்
அப்போது பஞ்சமியின் நடனத்தை கண்டு கண்ணீர் விட்டார். சூரி கூறுகையில் "உங்கள் குடும்பத்தில் எந்த பின்புலமும் இல்லை. அன்றாடம் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறீர்கள். ஆனால் உன்னுடைய திறமையால் நீ ஜெயிக்க வேண்டும் என உன் கணவர் பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருக்கிறார்.
வாழ்த்து
அவருக்கு என் வாழ்த்துகள். உன் குழந்தைகளுக்கு காது குத்தியாச்சா என சூரி கேட்டார். அதற்கு பஞ்சமி இல்லைண்ணா என சொல்ல, உடனே நானே உன் குழந்தைகளுக்கு தாய்மாமனாக இருந்து காது குத்துவேன். அதற்கான செலவையும் அவர்களது படிப்புச் செலவையும் நானே ஏற்கிறேன் என வாக்களித்தார்.
கலங்கிய பஞ்சமி
அப்போது பஞ்சமி , கலங்கியவாறு சூரியின் கால்களில் விழுந்தார். அதற்கு சூரி, பெண்கள் யார் காலிலும் விழக் கூடாதும்மா என்றார். அவர் சொல்லிய ஒரு வாரத்தில் தற்போது தனது வாக்குறுதியை சூரி நிறைவேற்றிருக்கிறார். ஆம் இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்தவேலூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் காதணி விழா நடந்தது.
காது குத்திய சூரி
இதில் நடிகர் சூரி கலந்து கொண்டு குழந்தைகளை மடியில் உட்காரவைத்து மொட்டை அடிக்கும் வரை உடனிருந்தார். மேலும் குழந்தைகளுக்கு புத்தாடைகள், சீர் வரிசைகளையும் வழங்கினார். இதையடுத்து இயக்குநர் பிரசாந்த், நடிகர் சூரி, குழந்தையின் தாய்மாமன் கலைத் தென்றல் (பஞ்சமியின் தம்பி) ஆகிய மூவர் மடியிலும் மூன்று குழந்தைகளும் அமர்ந்து காது குத்தினர்.
விஜய், உதயநிதி இருவரும் வேண்டியவர்கள்தான்
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சூரி கூறுகையில் லோகேஷ் கனகராஜ் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. நடிக்க வேண்டும் என்பது ஆசை. விஜய், உதயநிதி இருவரும் எனக்கு வேண்டியவர்கள்தான் என தெரிவித்திருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications