நான் தெருவில் தூங்கியவன் நண்பா! வளர்ச்சியை பொறுக்க முடியாத ரசிகருக்கு மாஸ் ரிப்ளை கொடுத்த நடிகர் சூரி!
சென்னை: திரையுலகில் கடும் உழைப்பால் மட்டுமே முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் நடிகர் சூரி. ஆரம்ப நாட்களில் அவர் சந்தித்த போராட்டங்களும், சினிமா வாய்ப்புக்காகக் காத்திருந்த காலங்களும் ஏராளம். தனது சொந்த உழைப்பால் இன்று அவர் உயர்ந்திருக்கும் நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு ரசிகர், தீபாவளிப் பண்டிகையின் போது அவர் குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவின் கீழ் கமெண்ட் செய்ய, அதற்கு சூரி அளித்தப் பதில் இப்போது இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சூரி: கஷ்டங்களை தாண்டி வந்த கலைஞன்
மதுரையை சேர்ந்த நடிகர் சூரி, சினிமாவுக்கு வரும் முன்பு ஓட்டலில் வேலை பார்த்தது, வாய்ப்புக்காகத் தெருத் தெருவாக அலைந்தது, தெருவில் தூங்கி கிடைத்த வேலையெல்லாம் செய்து இன்று ஒரு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் இடம்பெற்ற 'பரோட்டா காமெடி' மூலம் தமிழகமெங்கும் பிரபலமானார். அதன் பிறகு, அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர், சமீபத்தில் வெளியான 'விடுதலை' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துத் தனது அடுத்த கட்டத்தையும் அடைந்துள்ளார்.
வளர்ச்சியை பொறுக்க முடியாதவரின் கமெண்ட்
சூரி தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஒரு ரசிகர், ஏளனம் செய்யும் தொனியில் "திண்ணையில் தூங்கியவனுக்கு வந்த வாழ்வை பாருங்க" என்று கமெண்டை பதிவிட்டிருக்கிறார். கஷ்டப்பட்ட நாட்களில் சூரி இருந்த சூழலைக் கிண்டல் செய்யும் விதமாக அந்தக் கமெண்ட் இருந்தது.
ஆனால், தனது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களுக்குப் பதிலடி கொடுக்க சூரி தயங்குவதில்லை. அதற்கு அவர் அளித்தப் பதில்தான் இப்போது வைரலாகி, பலருக்கும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
சூரியின் மாஸ் ரிப்ளை
"திண்ணையில் இல்லை நண்பா, நான் பல நாட்களாக இருட்டிலும் தெருவிலும் இருந்து வந்தவன் நான்! அந்தப் பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மைகளையும், மதிப்பையும் கற்றுத் தந்தது! நீயும் உளம் வளர்த்து நம்பிக்கையுடன் முன்னேறினால், வெற்றி நிச்சயம் உன்னையும் தேடி வரும்!"
சூரியின் பேட்டி
சூரியின் இந்தப் பதில், வெறும் கோபத்தின் வெளிப்பாடு அல்ல. தன் நிலையை எண்ணிக் கிண்டல் செய்பவர்களுக்குக் கூட, தன்னுடைய உழைப்பின் மூலமாகவே பதில் சொல்லி, அவர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக அவரது பதில் அமைந்துள்ளது. தனக்குச் சொந்தமாக வீடு, கார் வாங்கியது குறித்துப் பல பேட்டிகளில் அவர் உருக்கத்துடன் பேசியிருக்கிறார். "வாழ்க்கை எனக்குக் கஷ்டங்களைக் கொடுத்தது, ஆனால் அதை நான் ஒரு பாடமாகக் கற்றுக் கொண்டேன்" என்று அவர் கூறியிருக்கிறார்.
சூரி போன்ற கலைஞர்கள், சினிமாத் துறையின் ஜொலிக்கும் பக்கத்தை மட்டும் பார்க்காமல், அதற்காக அவர்கள் கொடுத்த உழைப்பையும், கண்ணீரையும் உணர்ந்திருக்கிறார்கள். அவரது இந்தப் பதில், 'வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்' என்பதையும், கடின உழைப்பாளிகள் எப்போதும் முன்னேற்றப் பாதையில் உறுதியாக இருப்பார்கள் என்பதையும் நிஜமாகவே உணர்த்துகிறது.
சூரியின் இந்தத் துணிச்சலானப் பதிவுக்குப் பாராட்டுகள் குவிவதுடன், இது பல இளைஞர்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை பாடமாக மாறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications