அன்று சுவற்றுக்கு பெயிண்ட் அடித்தேன்.. இன்று! கெத்தான வீடியோ பகிர்ந்த சூரி.. ஆனால் இதை கவனிச்சீங்களா?
சென்னை: நடிகர் சூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது. தான் ஆரம்ப கால கட்டத்தில் பெயிண்டர் ஆக இருந்து இப்போது நடிகராக மாறி இருப்பதை ஒரு வீடியோவில் சூரி பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாக உழைப்பும், திறமையும் இருந்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் ஆரம்ப காலகட்டத்தில் காமெடியாக சின்ன சின்ன கேரக்டரில் சினிமா மற்றும் சீரியலில் என்ட்ரி கொடுத்த சூரி இப்போது கதாநாயகனாக கலக்கி கொண்டு இருக்கிறார். இவரை ரோல் மாடலாக பலர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவில் எப்போதும் வேண்டுமானாலும் மாற்றம் ஏற்படும். வெற்றி என்பது நிலையானது கிடையாது என்பதற்கு சூரியும் ஒரு எடுத்துக்காட்டு. ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் ஒரு சில இடங்களில் மட்டும் முகத்தை காட்டி வந்த சூரி இன்று கதாநாயகனாக உயர்ந்து இருந்தாலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் பல பேட்டிகளில் அதை பகிர்ந்து வருகிறார்.
சூரிக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி பெரிய பிரபலத்தை கொடுத்தது. ஆனால் அதற்கு முன்பு அவர் சீரியல்களிலும் திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேலைகளை கூட செய்திருக்கிறார். லைட் மேன் ஆகவும் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும் இருந்த சூரி இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார்.
சூரி கதாநாயகனான அறிமுகமான "விடுதலை" படம் அவருக்கு புகழை கொடுத்தது. அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
அதாவது சூரி ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அங்கு எதிர்பக்கத்தில் ஒரு பில்டிங்கில் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. அந்த பில்டிங்கில் ஒரு நபர் சுவற்றில் தொங்கியபடி அங்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். அதை சூம் செய்து வீடியோ எடுத்த சூரி "சுவர்களில் நிறத்தை அன்று பதித்தேன். இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்" என்று அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த பதிவிற்கு ஒரு ரசிகர், "மிக மிக எளிமையான அருமையான ஒரு நபர் என்றால் அது நீங்கள் தான் சார். நான் சூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்களை பார்த்திருக்கிறேன். அவ்வளவு எளிமை, பொறுமை. நீங்கள் என்றுமே இதுபோல் இருக்கணும் சார் இந்த வீடியோவை பார்க்கவே அழகாக இருக்கிறது" என்று கூறி இருக்கிறார்.

அதுபோல இன்னொரு ரசிகர்,"நீங்கள் உழைப்பால் உயர்ந்தவன்" என்று பாராட்டி இருக்கிறார். அடுத்ததாக இன்னொரு ரசிகர் "தலைவா நீங்கள் சொன்ன வரி எவ்வளவு அருமையாக இருக்கிறது. நீங்கள் உழைப்பால் உயர்ந்தவன்" என்று பாராட்டி இருக்கிறார். அதுபோல இன்னொரு ரசிகர் "அன்று நீங்கள் பட்ட கஷ்டம் இன்று உங்களிடம் உள்ள திறமையின் பயிற்சி. நீங்கள் மிதித்த முள்பாதை வெற்றிப்பாதை ஆனது.. என்னை போன்று முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள்" என்று கூறியிருக்கிறார்.
நீ நடிகனானது தான் காமெடி! உன்ன ஹீரோவா ஆக்குனது யாரு? இளையராஜா கேட்ட கேள்வி.. கூனிக்குறுகிய சூரி
இப்படியாக சூரியை ரசிகர்கள் கமெண்ட்களில் பாராட்டி இருக்கிறார்கள். அதுபோல ஒரு ரசிகர் ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதில் "சுவற்றில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் நபரும் ஒரு நாள் ஜெயிப்பார் உங்களை போல" என்று கூறி இருக்கிறார். அதற்கு சூரி, "100 சதவீதம் உண்மை" என்று பதில் கொடுத்து இருக்கிறார். சூரி தன்னுடைய instagram பக்கத்தில் ரசிகர்கள் போடும் கமெண்ட்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று இந்த கமெண்ட் மூலமாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications