நீ நடிகனானது தான் காமெடி! உன்ன ஹீரோவா ஆக்குனது யாரு? இளையராஜா கேட்ட கேள்வி.. கூனிக்குறுகிய சூரி
சென்னை: நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது சூரியிடம் இளையராஜா, "நீ கதாநாயகன் என்பதுதான் பெரிய காமெடி.. உன்னை எல்லாம் ஹீரோவா ஆக்குனது யாரு?" என்று கேட்டதும் சூரி அதிர்ச்சி ஆகி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானி ஸ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியன், கிஷோர், போஸ் வெங்கட் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா மைக்கில் பேசும்போது சூரி என்று முதலில் கூப்பிடுகிறார். அதற்கு மக்கள் பெரிய அளவில் கைதட்டவில்லை. உடனே இளையராஜா சூரிக்கு இவ்வளவுதான் ரசிகர்களா? என்று கேட்டதும் அங்கு கைதட்டல் சத்தம் அதிகமாகிறது.
அப்போது சூரியிடம் இளையராஜா நீ கூட்டிட்டு வந்த ஆட்கள் எல்லாரும் இப்பதான் கைதட்டுறாங்க என்று கிண்டல் செய்கிறார். அதை முதலில் கவனிக்காத சூரியிடம் வெற்றிமாறன் இளையராஜா பேசியதை சொன்னதும் சார், அது இங்க இருக்கறவங்க எல்லாரும் என்னுடைய அன்பு தம்பிகள், அண்ணன்மார்கள் தான் சார் என்று சூரி சொல்கிறார்.

அதற்கு இளையராஜா அப்போ சூரி என்று பெயரை சொன்னதும் எதற்காக அவங்க கைதட்டல என்று கேட்டதும் சூரி, நீங்க பேசும்போது தொந்தரவு பண்ணக்கூடாது என்று நினைத்து இருப்பாங்க சார் என்று சொல்கிறார். உடனே சூரியை பக்கத்தில் கூப்பிட்ட இளையராஜா நீங்க இப்போ எத்தனை படத்தில் கதாநாயகனா நடிக்கிறீங்க என்று கேட்கிறார்.
அதற்கு சூரி இப்போ மூன்று படத்தில் நடித்து முடித்து இருக்கிறேன் சார் என்று சொன்னதும், அதற்கு இளையராஜா எத்தனை படத்தில் கதையின் நாயகனா நீங்க நடிச்சிட்டு இருக்கீங்கன்னு நான் கேட்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சூரி சார் இரண்டு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் சார் என்று சொல்கிறார்.
அதற்கு இளையராஜா "உன்னை கதாநாயகனா ஆக்குனதே வெற்றிமாறன் தான்.. நீ காமெடி தானே பண்ணிட்டு இருந்த?
நீ கதாநாயகனா நடிக்கிறது காமெடியா? கதாநாயகனா?" என்று கேட்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சூரி என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி நின்று கொண்டிருக்கிறார். பிறகு சிறிது நேரம் கழித்து, "இதுவும் பதிவு தான் சார்... என் வாழ்நாளில் மறக்க முடியாத பதிவு" என்று சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications