மனைவி கர்ப்பமா இருந்தபோது நான் செய்த தப்பு! நடந்தது இதுதான்! வானத்தைப்போல நடிகர் ஸ்ரீ உருக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக சின்ராசு கேரக்டரில் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். இவருடைய மனைவி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து பெயர் வாங்கியவர் தான். அவர் யார் என்றால் நடிகர் அருண்குமார் நடிப்பில் வெளியான பாண்டவர் பூமி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஷமிதா தான், நடிகர் ஸ்ரீகுமாரின் காதல் மனைவி.
இந்த நிலையில் ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய மனைவி ஷமிதா இருவரும் சமீபத்தில் ஒரு தனியார் சேனலில் பேட்டி கொடுத்திருந்தனர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர்கள் இருவரும் சிவசக்தி சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது 40 நாட்களுக்குள் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் எப்படி நடைபெற்றது, அதற்கு பிறகு தாங்கள் பட்ட கஷ்டங்கள் என்ன என்பது குறித்து இருவரும் மனம் திறந்து பேசி இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை ஷமிதா பாண்டவர் பூமி என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் ஷமிதா பிரபலமாகவில்லை.முதல் சீரியலில் இவரோடு நடித்த ஸ்ரீகுமாரை 2001 ஆம் ஆண்டு ஷமிதா திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஷமிதா அதற்குப் பிறகு வசந்தம், பிள்ளை நிலா, புகுந்த வீடு, பொன்னூஞ்சல், மௌன ராகம், திருமகள், பேரன்பு, பொன்னி என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதிலும் சமீபத்தில் மௌனராகம் சீரியலுக்கு பிறகு இவருக்கு வரும் கேரக்டர் எல்லாமே நெகட்டிவ்வாக இருக்கிறது. அதனாலேயே என்னவோ இப்போது புதியதாக எந்த சீரியலிலும் ஷமிதாவை காண முடியவில்லை. ஆனால் ஷபிதாவும் அவருடைய கணவர் ஸ்ரீகுமாரும் பிரிந்து விட்டதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இதற்கு பதில் அளித்த வீடியோவும் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதில் தங்களுடைய திருமணம். காதல் திருமணமா? அல்லது வீட்டில் பார்த்து முடித்து வைத்த திருமணமா? என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது. ஆனால் எங்களுடைய திருமணம் காதல் திருமணம் தான் என்று நடிகர் ஸ்ரீ கூறியிருக்கிறார். அதோடு எங்களுடைய திருமணம் எப்படி நடந்தது என்று கேட்டால் எல்லோரும் சிரித்து விடுவார்கள். காரணம் நாங்கள் பேச ஆரம்பித்து 40 நாட்களுக்குள் எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது.
அந்த நேரத்தில் நான் பிரேக்கப்பில் மனம் வெறுத்துப் போய் இருந்தேன். அப்போதுதான் எனக்கு அட்வைஸ் செய்து ஷமிதா என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ஷமிதாவை எனக்கு அந்த நேரத்தில் பிடித்திருந்தது. அதே நேரத்தில் ஷமிதாவுக்கு என்னை எதற்காக பிடித்தது என்று தெரியவில்லை. அவரும் என்னிடம் மிகவும் பாசமாக இருந்தார் என்று ஸ்ரீ சொல்ல, அதற்கு ஷமிதா எனக்கு இவருடைய பொறுமை ரொம்பவே பிடிக்கும்.
அப்போதெல்லாம் ரொம்பவே பொறுமையாக இருப்பார். அவரை சீண்டுகிற மாதிரி பல விஷயங்கள் நடந்தால் கூட அவர் அந்த இடத்தில் பொறுமை காப்பார். எனக்கு அது ரொம்ப பிடித்தது. அதனாலேயே என்னுடைய காதலை நான் தான் அவரிடம் முதலில் சொன்னேன் என்று ஷமிதா சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து பேசிய ஸ்ரீ காதலை அவர் சொல்லிவிட்டார். பிறகு திருமணத்தைப் பற்றி உடனே நாங்கள் முடிவெடுத்தோம்.
வீட்டில் சொன்னதும் எங்களுக்கு பெரிதாக எந்த எதிர்ப்பும் செய்யவில்லை உடனே திருமணமும் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு நான் ஷமிதாவிற்கு பிடித்த மாதிரி இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஷமிதா ஆசைப்பட்டதை என்னால் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் நான் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். ஷமிதாவும் சீரியலில் நடித்தார். அவர் என்னை விட பெரிய நடிகை. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கர்ப்பமானார்.
அப்போது இந்த குழந்தை இந்த நேரத்தில் கண்டிப்பாக நமக்கு தேவை என்று நாங்கள் சொன்னதும் ஷமிதா ஏற்றுக்கொண்டு குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் ஷமிதா கர்ப்பமாக இருந்த நேரத்தில் நான் அவரோடு நேரத்தை செலவிடவில்லை. கர்ப்பமாக இருந்த பொண்ணுக்கு என்ன வேணும் என்ன வேண்டாம் என்று கூட நான் பார்த்து பார்த்து செய்தது கிடையாது.
அந்த நேரத்தில் நான் வேலை வேலை என்று இருந்து விட்டேன். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியிலேயே ஸ்ரீ தன்னுடைய மனைவியிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். அதற்கு ஷமிதா இவர் என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர் அந்த நேரத்தில் வேலையில் தான் பிசியாக இருந்தார். வேறு எந்த விஷயத்தில் என்னை கண்டுக்காமல் விட்டிருந்தால் நான் கோபப்பட்டு இருப்பேன்.
முதலில் எனக்கு இவர் மீது சில கோபம் வந்தது பிறகு நமக்காக தானே வேலை செய்கிறார் என்று நானே என்னுடைய மனதை மாற்றிக் கொண்டேன் என்று க்யூட்டாக பேசியிருக்கிறார்கள். இவர்கள் இருவருடைய மெச்சூரான பேச்சைக் கேட்ட ரசிகர்கள் இவர்கள் இதுபோல நீண்ட நாட்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
அதுபோல இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து பேசுவதை பார்த்து ரசிகர்கள் இதை பலரும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் சண்டை போட்டு டைவர்ஸ்க்கு போகிறவர்கள் இவர்கள் பேச்சை கண்டிப்பாக கேட்டுக்கோங்க என்று கமெண்ட்களில் அட்வைஸ் கொடுக்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications