நான் சர்ச்சுக்கு போய் டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்! ஆனால், “இதை”தான் மனதார செய்வேன்! நடிகர் ஸ்ரீ குமார் பேட்டி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீகுமார் சின்னத்திரையில் பல சீரியலில் நடித்திருக்கிறார். அவர் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருக்கிறார். அது பற்றி பல இடங்களில் பேசி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு போய் டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன். ஆனால் ஜீசஸ்க்கு பிடித்த செயலை தான் நான் செய்வேன் என்று பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் ஸ்ரீகுமார் பல வருடங்களாகவே சின்னத்திரையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய மனைவியும் சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்திருக்கிறார். பாண்டவர் பூமி திரைப்படத்தில் தோழா தோழா பாடல் மூலம் பிரபலமடைந்த நடிகை தான் இவருடைய மனைவி ஸ்ரீ உடன் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

தனம் சீரியல் நடிகர்
பிறகு இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் உட்பட பல சீரியல்களிலும் ஸ்ரீ யின் மனைவி நடித்திருக்கிறார். அதுபோல ஸ்ரீ தொடர்ந்து சீரியல்களில் நடித்திருக்கிறார். சன் டிவியில் அவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப்போல சீரியல் முடிவடைந்ததும் விஜய் டிவியில் தனம் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
ஜீசஸ் பற்றி ஸ்ரீகுமார் கருத்து
அந்த சீரியலில் அவர் இறப்பது போன்ற காட்சிகள் வைத்திருந்தது. ஆனாலும் ஒரு பெண்ணின் தைரியத்தையும் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை மையப்படுத்திய சீரியலில் தானும் ஒரு முக்கிய கேரக்டராக இருந்தது தனக்கு சந்தோஷம்தான் என்று ஸ்ரீ கூறி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும், ஆன்மீக நம்பிக்கை, சமூகத்திற்காக அவர் செய்கின்ற செய்கை குறித்து பேசி இருந்தார். அது சமூக வலைத்தளத்தில் வரவேற்பையும், விவாதத்தையும் உருவாக்கி இருக்கிறது.
ஸ்ரீகுமார் விளக்கம்
அதில் ஸ்ரீ பேசும்போது எனக்கு ஜீசஸ் மேல ரொம்ப ஈடுபாடு உண்டு. நான் இயேசுவின் செயல்களை வழிகாட்டியாக கொண்டு வாழ்கிறேன். அதனால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையை நடத்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு போய் டைம் வேஸ்ட் பண்ண எனக்கு பிடிக்காது. இறைவன் அங்கு இல்லை கஷ்டப்படுகிற ஏழை மக்களில் தான் இருக்கிறார்.
அதனால் தான் நான் என்னால் முடிந்தது அளவிற்கு மருத்துவமனையில் இருக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன் என்று பேசி இருக்கிறார். ஸ்ரீ பேசிய இந்த கருத்து இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது, பலர் இவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள், சிலர் இவரை விமர்சித்து வருகிறார்கள். அவர் சொல்வது சரி என்று நீங்க நினைக்கிறீங்களா? இல்லை, அவர் சொல்வது தவறு என்று நினைக்கிறீர்களா? பாஸ்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications