பாண்டவர் பூமி நடிகையை ஞாபகம் இருக்கா? வானத்தைப்போல சீரியல் நடிகரோடு விவாகரத்தா? செம பஞ்ச்
சென்னை: நடிகர் அருண்குமார் நடிப்பில் வெளியான பாண்டவர் பூமி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஷமிதா வானத்தைப்போல சீரியல் நடிகர் ஸ்ரீ குமாரோடு திருமணம் செய்து இருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா என்று பரவி வந்த வதந்திகளுக்கு ஷமிதா பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ஷமிதாவிற்கு பாண்டவர் பூமி திரைப்படம் பெரிய அளவில் பிரபலம் கொடுத்திருந்தாலும் அதற்கு பிறகு பெரிய அளவில் அவர் எதிர்பார்த்தபடி திரைப்படங்கள் அமையாததால் சின்ன திரையில் கவனத்தை செலுத்தி இப்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால் ஷமிதா மற்றும் நடிகர் ஸ்ரீகுமார் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று செய்தி பரவி வந்த நிலையில் அதனை மறுத்து தங்களுடைய காதல் வாழ்க்கை ரகசியங்களை ஷமிதா மற்றும் ஸ்ரீகுமார் பகிர்ந்த திரோபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் 90's கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக பாண்டவர் பூமி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்" என்ற பாடல் இப்போதும் அதிகமான ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை எங்கே போனார்? அதற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் ஆளையே காணவில்லையே என்று பலர் தேடிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அவர் உண்மையில் எங்கேயும் காணாமல் போகவில்லை. அந்த திரைப்படத்தில் நடித்த நடிகையின் பெயர் ஷமிதா தான். இவர் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதுவும் ஜீவா மற்றும் தாமரை என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். ஆனால் முதல் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த புகழின் வெளிச்சம் அடுத்த திரைப்படத்தில் கிடைக்காமல் போயிருக்கிறது.

ஒரு சில வருடங்கள் காத்திருந்த ஷமிதா வாய்ப்புகள் சரியாக வராததால் சின்ன திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அதுவும் "சிவசக்தி" என்ற சீரியலில் சன் டிவியில் இவர் 2008 முதல் 2009 வரை நடித்து வந்தார். இந்த சீரியலில் இவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவரோடு இந்த சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் கதாநாயகனாக, நடித்து இருக்கிறார்.
முதல் சீரியலில் இவரோடு நடித்த ஸ்ரீகுமாரை 2009 ஆம் ஆண்டு ஷமிதா திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஷமிதா அதற்குப் பிறகு வசந்தம், பிள்ளை நிலா, புகுந்த வீடு, பொன்னூஞ்சல், மௌன ராகம், திருமகள், பேரன்பு, பொன்னி என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் சமீபத்தில் மௌனராகம் சீரியலுக்கு பிறகு இவருக்கு வரும் கேரக்டர் எல்லாமே நெகட்டிவ்வாக இருக்கிறது. அதனாலேயே என்னவோ இப்போது புதியதாக எந்த சீரியலிலும் ஷமிதாவை காண முடியவில்லை. ஆனால் ஷபிதாவும் அவருடைய கணவர் ஸ்ரீகுமாரும் பிரிந்து விட்டதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இதற்கு பதில் அளித்த வீடியோவும் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதில் ஸ்ரீ பேசுகையில் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்களா என்று என்னுடைய நண்பர்களே கேட்கிறார்கள். இது என்ன அர்த்தத்துல இப்படியெல்லாம் பேசுறாங்கன்னு எங்களுக்கு கொஞ்சம் கூட தெரியல. என்கிட்ட கேட்கிறவர்கள் கிட்ட உடனே நான் என் பொண்டாட்டிக்கு போன் பண்ணி தரேன் நீங்க பேசுறீங்களான்னு கேட்பேன். நாங்கள் இரண்டு பேரும் ஒரே துறையில் இருப்பதால் எங்கள் இருவருக்குள்ளும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது என்று ஸ்ரீகுமார் பேசியிருக்கும் நிலையில்,
அதற்கு ஷமிதா நான் எந்த இடத்திலும் ஸ்ரீயின் வேலையில் தலையிட மாட்டேன். அதுபோல ஸ்ரீயும் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு எந்த கட்டளையும் போட்டது கிடையாது. என்னுடைய கேரக்டர் பற்றி அவருக்கு நல்லாவே தெரியும் அதனால் நிறைய இடங்களில் அவரும் எனக்கு விட்டுக் கொடுக்கிறார். எனக்கு அம்மா அப்பா வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி எல்லா இடங்களிலும் பிரீடம் கிடைக்கிறது. அதனால் சிறப்பாக வேலையும் பார்க்க முடிகிறது குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள முடிகிறது.
அதுபோல ஸ்ரீ சில இடங்களில் டக்கென்று கோபப்படுபவர். ஆனால் எந்த இடத்திலும் தன்னுடைய தந்தையின் பெயரை சொல்லி தனக்கான வாய்ப்பு கேட்டு போய் நின்றது கிடையாது. இது எனக்கு ரொம்பவே பிடித்தது. அவர் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோ போலத்தான் நடந்து கொள்வார். அதனால் பல பிரச்சனைகளும் வந்து இருக்கிறது.
அதையும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் திருமணம் ஆன முதல் ஐந்து வருடங்களுக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதற்கு பிறகு அதுவெல்லாம் காணாமல் போய்விடுவது தான் எல்லோருடைய வாழ்க்கையிலும் இயல்பாக இருப்பது என்று அந்த பேட்டியில் நடிகர் ஸ்ரீ மற்றும் நடிகை ஷமிதா பேசியிருக்கின்றனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications