Actor Sri: நடிகர் ஸ்ரீ திடீரென வெளியிட்ட மகிழ்ச்சியான பதிவு.. பெரிய சம்பவம் இருக்கு.. இப்போ தான் உங்க சப்போர்ட் தேவை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் ஸ்ரீராம் என்ற ஸ்ரீராம் நடராஜன் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். அப்போது பலரும் ஸ்ரீ பழைய நிலைக்கு மாற வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்ரீ இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.
சினிமாவில் நாம் பார்த்து ரசித்த நடிகர் திடீரென ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தால், அவரை பார்க்கும்போது ஐயோ இவருக்கு என்ன ஆச்சு என்ற பரிதாபம் அனைவருக்கும் ஏற்படும். அதுபோலத்தான் நடிகர் ஸ்ரீ நிலைமையை பார்த்து பலரும் பதறிப் போய் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு instagram பக்கத்தில் ஸ்ரீ வெளியிட்ட வீடியோவை பற்றி நாம் செய்திகள் போட்டிருந்தோம். அதைத்தொடர்ந்து சோசியல் மீடியா எங்கும் ஸ்ரீ பற்றிய புகைப்படங்கள் தான் வைரலானது.

நடிகர் ஸ்ரீ நடித்த திரைப்படம்
ஸ்ரீ அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்து போய் இருந்தார். இவர் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஸ்ரீ விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அதுபோல ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு போன்ற படங்களில் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்தார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.
குடும்பத்தினர் எடுத்த முடிவு
ஆனால் அந்த திரைப்படம் ஒரு சில வருடங்களுக்கு முன்பே சூட்டிங் எடுக்கப்பட்டது. சில வருடங்கள் கழித்து தான் வெளியானது. அது போல தான் நடித்த திரைப்படங்களில் தனக்கு சரியான பேமெண்ட் வரவில்லை என்று கடந்த வருடத்திலேயே ஸ்ரீ தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரையும், நண்பர்களையும் பிரிந்து தனியாக வசித்த ஸ்ரீ மீண்டும் அவருடைய குடும்பத்தோடு சேர வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய நண்பர்களின் முயற்சியால் ஸ்ரீ இப்பொழுது அவருடைய குடும்பத்துடன் சேர்ந்திருக்கிறார்
நடிகர் ஸ்ரீ பதிவு
அதுபோல அவர் வெளியிட்ட சில வீடியோக்களையும் அவர் டெலிட் செய்திருந்தார். அவர் இப்போது முறையான சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் "may I come in?" என்ற நாவலை ஸ்ரீ எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். இன்று ஜூன் 18, 2025 புதன்கிழமை என்னுடைய முதல் ஆங்கில நாவலான "may I come in" ஐ உலகிற்கு பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. amazon.in உங்கள் பிரதிகளை இப்போதே பெறுங்கள் என பதிவிட்டு இருக்கிறார்.
குவியும் வாழ்த்துக்கள்
ஸ்ரீ பழைய நிலைக்கு வரவேண்டும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டாலும் அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்று அவருடன் நடித்த பல நடிகர்களும் கூறி இருக்கிறார்கள். இப்போது தான் ஒரு ஆங்கில நாவல் எழுதி இருக்கிறேன் என்று அவர் கூறி இருக்கும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications