அந்த முத்திரை குத்துறாங்க.. நீ வந்து பார்த்தியா? பிரபல நடிகர் பேச்சுக்கு சுருளிராஜன் மனைவி ஆவேசம்
சென்னை: காமெடி நடிகர் சுருளிராஜாவின் இறப்பு பற்றி சிலர் சுருளிராஜன் குடித்து உடல் உறுப்புகள் செயல் இழந்து பரிதாபமாக இறந்து போனதாக பேட்டியில் பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் சுருளிராஜனின் மனைவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவரின் மறைவு குறித்து பரவி வரும் வதந்திக்கு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகரான சுருளிராஜன் 1959ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வந்திருக்கிறார் .அதற்குப் பிறகு கலைஞரின் "காகித பூ" என்ற நாடகத்தின் மூலமாகத்தான் முதல் முதலாக தேர்தல் நிதிக்காக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அதற்கு பிறகு தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்பட கழகத்தால் எடுக்கப்பட்ட இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்குப் பிறகு 70ஸ்க்களில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ஆதிபராசக்தி திரைப்படம் சுருளி ராஜனுக்கு பெரிய அளவில் புகழையும் பெயரையும் வாங்கிக் கொடுத்தது.
70ஸ் முதல் 80ஸ்களில் பிரபலமான நடிகராக சுருளி ராஜன் அந்த காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்திருக்கிறார். கவுண்டமணி செந்தில் காமெடி எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறதோ அதுபோல சுருளிராஜன் காமெடியும் இப்போதும் பலரால் கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆருடன் பல்வேறு படங்களில் நடித்திருந்த சுருளிராஜன் எங்க வீட்டு பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் பாடலில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கி இருந்தார்.
அதுபோல எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் உட்பட பல ஹீரோக்களுடன் அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் 1980 ஆம் ஆண்டு 42 வது வயதில் மரணம் அடைந்திருந்தார். அவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இது பற்றி சில மாதங்களுக்கு முன்பு பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் பேசுகையில் சுருளிராஜன் அளவுக்கு அதிகமாக மது குடிப்பார், எம்ஜிஆர் எவ்வளவோ பண உதவி செய்தும் குணம் அடைய முடியாமல் இறந்து போய்விட்டார் என்று பேசி இருந்தார்.

அதோடு சுருளிராஜன் அளவுக்கு அதிகமாக மது குடிப்பதால் அவருக்கு வெளிநாட்டு வகையான மதுபானங்கள் வாங்கிக் கொடுத்தே பலர் அவருடைய கால்ஷீட் பெற்றார்கள். அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள் என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இது பற்றி சமீபத்தில் சுருளிராஜனின் மனைவி தங்களுடைய கோபத்தை தெரிவித்திருக்கிறார்.
அதாவது அவர் பேசுகையில் அரசியல்காரர்களும் சில பத்திரிகையாளர்களும் அடுத்தவர்களைப் பற்றி எதுவும் தெரியாமல் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி விடுகிறார்கள். அதிலும் ஆம்பளையா இருந்தா அவன் குடிப்பான், பொம்பளையா இருந்தா மட்டமான தொழில் பண்ணுவா என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இது எல்லா பத்திரிக்கையாளரும் பண்ணுறது கிடையாது. ஒரு சிலர் நான் பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொண்டு சில சேனல்களில் பேசுபவர்கள் இப்படி செய்கிறார்கள்.

என்னுடைய கணவர் சுருளிராஜன் குடித்து தான் இறந்தார் என்று சிலர் சொல்கிறார்கள். இதை யாரு சொன்னாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. நீங்க என்ன பக்கத்தில் இருந்து பார்த்தீங்களா? என் குடும்பத்தில் இருந்து நீங்க பார்த்தீங்களா? நான் பெயர் சொல்ல விரும்பல ஒருத்தர் பேட்டியில் "சுருளி ராஜன் குடிச்சு குடிச்சு செத்து போயிட்டாரு, அவர் கவிதா ஹோட்டலில் அதாவது (கண்ணதாசன் ஹோட்டல் இப்போது இல்லை) அங்கே தான் சுருளிராஜன் இருப்பாரு, சுருளி ராஜன் இறந்த பிறகு அவருடைய புள்ள குட்டிங்க எல்லாம் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் ரோட்டில் அலைகிறாங்க என்று பேசுனாரு.
அப்படி பேசுற நபர் எங்க வீட்டில் வந்து பார்த்தாரா? என் வீட்டை வந்து பார்த்துட்டு தானே அவர் பேசணும்.. ஆனா ஒண்ணுமே தெரியாம அவர்களுடைய வருமானத்துக்காக எங்களை பற்றி தவறாக பேசலாமா என்று சுருளிராஜனின் மனைவி கோபப்பட்டு இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications