பச்சைப் பொய்.. சூர்யா வணங்கான் படத்தில் இதுக்குதான் நடிக்கலியா? அஜித்தை அடித்தாரா பாலா? பிரபலம் நச்
சென்னை: "வணங்கான்" படத்திலிருந்து சூர்யா வெளியேறியதற்கு பாலா சொல்லும் காரணம் ஏற்க முடியல. அந்த காரணத்தை கேட்டால் குழந்தை கூட சிரித்துவிடும். இதையெல்லாம் யாராவது நம்புவாங்களா? என்று பத்திரிகையாளர் அந்தணன் கருத்து கூறியிருக்கிறார்.
இயக்குனர் பாலாவின் 'வணங்கான்' படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது.. பிறகு சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். பிறகு அருண் விஜய் நடிப்பில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதில், நடிகர் சூர்யா பங்கேற்றிருந்தார்.

இந்த படத்தின் புரமோஷனுக்கான இயக்குநர் பாலா நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அப்படி, நேர்காணல் ஒன்றில், "வணங்கான் படத்திலிருந்து சூர்யா ஏன் விலகினார் என்பது குறித்து விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.
ஆடியோ: "வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகவில்லை. கன்னியாகுமரியில் நேரடியாக ஷூட்டிங் நடத்தியதால் சூர்யாவை பார்ப்பதற்காக பல ரசிகர்கள் கூடிவிட்டனர். அதனால், ஷூட்டிங்கை சரியாக நடத்த முடியவில்லை. பிறகு நானும் சூர்யாவும் ஆலோசித்துதான் அந்த முடிவை எடுத்தோம். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது" என்று கூறியிருந்தார்,
ஆனால், பாலாவின் இந்த விளக்கத்தை சோஷியல் மீடியாவில் பலரும் ஏற்கவில்லை. வேறு ஏதோ காரணத்தினால்தான் சூர்யா அப்படத்திலிருந்து விலகியிருக்கிறார் என்று கமெண்ட்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு அந்தணன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "பாலா ஒரு முரடன்.. வாயில் வந்ததை பேசுவார். யாருக்கும் அடங்காத மனிதர் என்றெல்லாம் ஒரு இமேஜ் இருக்கிறது.
பிம்பம்: 10 நாள் குளிக்காமல், லுங்கியுடன் நடிக்க வேண்டும் என்று டைரக்டர்கள் சொன்னால் எந்த ஹீரோவும் கேட்க மாட்டார்கள். ஆனால், பாலா சொன்னால் மட்டும் எல்லா ஹீரோக்களும் கேட்பார்கள். அந்த அளவுக்கு ஒரு நம்பிக்கையை பாலா உருவாக்கி வைத்திருக்கிறார். எனவேதான், பாலா தயாரிப்பில் அஜித் நடிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதில் ஏதோ பிரச்சனை வந்து, பிறகு நடிக்க முடியாமல் போய்விட்டது.
அதற்காக அஜித்தை பாலா அடித்துவிட்டார் என்று சொல்வதெல்லாம் பொய். அது தவறான தகவல். அஜித் இன்றைக்கு மென்மையானவராக இருக்கலாம். ஆனால் அன்று பாலாவுக்கு சமமான முரடனாக இருந்தார் அஜித். அப்படிப்பட்டவரை யாரும் அடித்திருக்க முடியாது. அதுமட்டுமல்ல, வணங்கான் படம் ரிலீசாகும் நேரத்தில், அஜித் ரசிகர்களை பகைத்து கொள்ள பாலா நினைக்க மாட்டார். வேறு யாரோ ஹீரோவை பற்றி பாலா சொன்னதை, வேண்டுமென்றே இப்படி எடிட் செய்து வெளியிடுகிறார்கள்.
பாலாவின் பக்குவம்: அடுத்தடுத்த தோல்வி பாலாவுக்கு வாழ்க்கை பாடத்தையும் பக்குவத்தையும் தந்திருக்கிறது. நீங்கள் பிறருக்கு செய்வதுதானே, மறுபடியும் திரும்ப கிடைக்கும்? அந்தவகையில், பாலா நிறைய பக்குவப்பட்டிருக்கலாம்..
எனினும் எதுக்குமே பயப்படாமல், உண்மையை பேசுபவர் பாலா என்ற பிம்பம் இருந்தது. ஆனால், பாலா சில பொய்யும் பேசுகிறார் என்பதுதான் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. "வணங்கான்" படத்திலிருந்து சூர்யா வெளியேறியதற்கு பாலா சொல்லும் காரணம் ஏற்க முடியல. அந்த காரணத்தை கேட்டால் குழந்தை கூட சிரித்துவிடும். இதையெல்லாம் யாராவது நம்புவாங்களா?
ரசிகர்கள்: இப்போதுகூட ஆர்.ஜே.பாலாஜி டைரக்ஷனில் சூர்யா நடித்து வருகிறார். தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் ரசிகர்கள் கூடுகிறார்கள். சூர்யா நடிக்கலியா என்ன? சூப்பர் ஸ்டார் ரஜினி, எங்கே ஷூட்டிங் போனாலும், இன்றைக்கும் கூட்டத்தை கன்ட்ரோல் பண்ண முடியாது. ஷூட்டிங் நடக்கதானே செய்யுது? கூட்டத்தை ஒழுங்குப்படுத்த முடியலேன்னா, அவரென்ன பெரிய டைரக்டர்?
பாலாவுக்கு உண்மையான காரணத்தை சொல்ல முடியல. ஆனால், பாலாவால் வளர்ந்தவர்கள் விஷால், ஆர்யா, அதர்வா, விக்ரம், சசிகுமார் யாருமே "வணங்கான்" படநிகழ்ச்சிக்கு போகல.
பெரிய நடிகர்: அன்று வந்த ஒரே பெரிய நடிகர் சூர்யா மட்டுமே. ஒருவேளை அதனால்கூட, இப்படி திடீர் பொய்யை பாலா மேடையில் சொல்லி சமாளித்திருக்கலாம்.. சூர்யாவும் அந்த விழாவுக்கு போயிருக்காவிட்டால், அந்தவிழா இந்த அளவுக்குகூட சகஸ்ஸ் ஆகியிருக்காது. எப்படியோ, பாலா பக்குவப்பட்டு இன்று நெகிழ்வான இடத்துக்கு வந்துவிட்டார்" என்று அந்தணன் கூறியிருக்கிறார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications