என் நெஞ்சில் இனி இவர் தான்.. 7 மணி நேரம் விஜய்க்காக தாடி பாலாஜி செய்த நெகிழ்ச்சி செயல்
சென்னை: நடிகர் தாடி பாலாஜி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த பிறகு விஜய்யின் உருவத்தை தன்னுடைய நெஞ்சு பகுதியில் டாட்டூ போட்டு இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு பல நடிகர்களும் அந்த கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் நடிகர் தாடி பாலாஜி விஜய் கட்சி அறிவித்ததும் அதில் இணைந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் கட்சியில் இணையும் போது விஜயின் கட்சி செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் கால்களில் விழுந்தார்.

காலில் விழும் கலாச்சாரத்தை வெறுக்கும் விஜயின் கட்சியிலேயே இப்படி நடக்கிறது என்று அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு தாடி பாலாஜிக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் தான் அவர் இப்படி எல்லாம் செய்கிறார் என்றும் கூட சிலர் விமர்சித்து வந்தனர்.
விஜய் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விக்கிரவாண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய் பேசியது பெரிய அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதுபோல சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் புத்தக வெளியீட்டின் போது கலந்து கொண்ட போதும் விஜய் பேசியது குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாடி பாலாஜி தன்னுடைய நெஞ்சில் விஜயின் உருவத்தை டாட்டூ போட்டு இருக்கிறார். இது பற்றி அவரிடம் இந்த டாட்டூ போடுவதற்காக கிட்டத்தட்ட 7 மணி நேரமாக வலியை தாங்கிக் கொண்டு இருந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, வலியை தாண்டி இந்த டாட்டூ போடும்போது எனக்கு ஒரு சந்தோஷம் கிடைத்தது.
விஜய் என்னுடைய நண்பர்.. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் போட்டவை நெஞ்சில் குத்தி இருக்கிறோம் என்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் தலைவா.. என்று விஜய்யின் போட்டோவுக்கு கீழே எழுதப்பட்டிருக்கிறது.
ஒருவேளை விஜய் இதை கேள்விப்பட்டு என்னை பார்க்க வர சொன்னால் நான் போய் பார்ப்பேன். இப்ப இருக்கிற வலி அவர் கூட நிற்கும்போது தெரியாது. இதை பார்த்தால் அழகாய் இருக்கு எப்படி எங்கே போட்டீங்கன்னு கேட்பாரு.. அதைத் தாண்டி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமானு கேட்பாரு.

சும்மா சட்டையில் போட்டு கழட்டிட்டு வேற சட்டை போட்டுக்கறதுக்கு சட்டைல அவரோட உருவத்தை நிறைய பேரு குத்துறாங்க. அதைத் தாண்டி யூனிக்கா டிஃபரண்டா இருக்கணும்னு நான் நெனச்சேன். அவர் எப்போதும் என்னுடைய ஹார்ட்டோட இருக்கணும்னு நினைக்கிறேன்.
அதுபோல முதலில் என்னுடைய மகளோட பெயரை குத்தி இருக்கிறேன். இந்த பக்கம் வீட்டில் அவர்களுடைய பெயரை குத்தி இருக்கிறேன். அப்போ இருந்த சந்தோஷம் வேற... ஆனால் இப்போது பயங்கர சந்தோஷமா இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன?











Click it and Unblock the Notifications