ஜோதிகா இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கல! டக்குனு அப்படி சொன்னாங்க.. நடிகர் தலைவாசல் விஜய் எமோஷனல்
சென்னை: தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பெயர் பெற்ற நடிகர் தலைவாசல் விஜய் இப்போது சினிமாக்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா மற்றும் சூர்யாவோடு பேரழகன் திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதில் ஜோதிகா தன்னிடம் பேசியதை குறித்து இவர் இப்படி எல்லாம் பேசுவார் என்று நான் நினைக்கவே இல்லை என்று நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார். நடிகர் தலைவாசல் விஜய் அந்த அளவிற்கு ஃபீல் பண்ணுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் தலைவாசல் விஜய் 1992 ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து அந்த திரைப்பட பெயரோடு தன்னுடைய பெயரை இணைத்து கொண்டார். அதற்கு பிறகு இப்ப வரைக்கும் அவரை தலைவாசல் விஜய் என்றுதான் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகி இருந்தாலும் அதற்குள் 200 படங்களுக்கு மேற்பட்டு நடித்திருக்கிறார். அதிலும் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பலரையும் மனம் கவர்ந்திருக்கும் அதிலும் தேவர்மகன், மகாநதி, மகளிர் மட்டும், விஷ்ணு, காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை என்று பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் பலருடைய மனதை கவர்ந்த இவர் வில்லனாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார்.
அதோடு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று பலமொழிகளிலும் தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார். நடிகர் என்றால் சினிமாவில் மட்டும் நடித்தால் போதாது என்று சின்ன திரையிலும் இவர் கலக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் அழகு சீரியலில் இவருடைய அப்பா கேரக்டர் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும். அதுபோல இப்பொழுது சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் என்ற சீரியலிலும் அப்பா கேரக்டரில் நடித்து இருக்கிறார்.
ஆனால் அந்த சீரியலில் அவர் இறந்து போவது போன்று காட்சிகள் வைத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் தான் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் பேரழகன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஜோதிகா என்கிட்ட நடந்து கொண்டதை என்னால மறக்கவே முடியாது... ஏன்னா ஒரு முறை எனக்கு அதிகமா முதுகு வலியா இருந்துச்சு.
அதனால நான் சேரில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தேன். அப்போது அங்கு வந்த ஜோதிகா என்னன்னு விசாரித்தார். நான் எனக்கு கொஞ்சம் முதுகு வலிக்குதுன்னு சொன்னேன், உடனே கேரவனில் வந்து படுத்துக்கோங்க என்று சொன்னார். அந்த கேரவன் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்காக கொடுக்கப்பட்டது. நான் வேண்டாம் என சொல்லி இருந்தேன். ஆனால் பொதுவா நான் பிரேக் டைமில் எங்க இடம் இருக்கிறதோ அங்கு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கிற ஆளு தான்.
ஆனா அன்னைக்கு அதற்கு சரியான இடம் இல்லாததால் தான் நான் சேரில் உட்கார்ந்திருந்தேன். ஆனால் அங்கு வந்த ஜோதிகா என்னை கட்டாயப்படுத்தி கேரவேனில் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னார். அதுக்கு முன்னாடி நான் சூர்யாவோட நாலஞ்சு படம் நடித்து இருக்கிறேன். ஆனால் ஜோதிகா ஓட அப்போதான் அறிமுகமாட்சி, அந்த திரைப்படத்தில் நான் ஜோதிகாவின் அண்ணனாக நடித்து இருந்தேன். ஆனால் நிஜத்திலும் ஜோதிகா என்னுடைய தங்கை போல தான் அப்போ நடந்து கொண்டாங்க என்று நடிகர் தலைவாசல் விஜய் கூறியிருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications