நடிகர் தலைவாசல் விஜய்யின் மகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரரோடு திருமணம்.. அந்த ரகசியம் தெரியுமா..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்த பிரபலமான நடிகர் தலைவாசல் விஜயின் மகளுடைய திருமணம் இன்று எளிமையான முறையில் நடைபெற்றது.

தலைவாசல் விஜயின் மகள் நீச்சல் வீராங்கனையாக இருக்கும் நிலையில் அவருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் அபராஜித்தோடு திருமணம் முடிவடைந்து இருக்கிறது.

Actor Thalivasal Vijays daughter married to a famous cricketer

இவர்களுடைய எங்கேஜ்மென்ட் கடந்த ஜனவரி மாதமே முடிவடைந்த நிலையில் இன்று திருமணம் முடிவடைந்திருக்கும் நிலையில் அதிகமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் தலைவாசல் விஜய் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் பல வருடங்களாக நடித்து வருகிறார். அதிலும் 1992 ஆம் ஆண்டு தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலமாக இவர் பிரபலமானதாலே அந்த பெயரை தன்னுடைய பெயருக்கு முன்பாக சேர்த்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

Actor Thalivasal Vijays daughter married to a famous cricketer

தலைவாசல் திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதற்குப் பிறகு தேவர்மகன் திரைப்படத்தில் கமலின் சகோதரனாகவும், அதைத் தொடர்ந்து மகாநதி திரைப்படத்தில் கமலின் மகளை தத்தெடுத்தவராகவும், மகளிர் மட்டும், விஷ்ணு, கருவேலம் பூக்கள், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை என்ன பல ஹிட் திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார்.

குறிப்பாக 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார். அதோடு பல திரைப்படங்களுக்கான விருதுகளையும் வாங்கி குவித்து வைத்திருக்கிறார். நடிக்க வந்து 25 ஆண்டுகளில் குணச்சித்திர கேரக்டர் மட்டுமின்றி வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் அஜித் நடிப்பில் வெற்றியடைந்த உன்னை நினைத்து என்ற திரைப்படத்தில் "கவலைப்படாதே சகோதரா" என்ற பாடல் பலருடைய மனதை கவர்ந்தது.

Actor Thalivasal Vijays daughter married to a famous cricketer

இந்த நிலையில் நடிகர் தலைவாசல் விஜயின் மூத்த மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்தான். இவர் சமீபத்தில் நேபாள நாட்டில் தலைநகர் காத்மேடுவில் நடந்த தெற்காசியை நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தான் அவருக்கும் தமிழக கிரிக்கெட் வீரரான அபராஜித் கடந்த ஜனவரி மாதம் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்த நிலையில் இன்று திருமணம் முடிவடைந்து இருக்கிறது.

இதற்கு அதிகமான ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் அளித்து வரும் நிலையில் கிரிக்கெட் வீரரான அபராஜித் ரஞ்சிக்கோப்பைக்காக தமிழ்நாட்டின் அணிக்காக விளையாடியவர் என்பதும் அதற்கு பின்பு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+