நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம்
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களுடன் தனித்த இடத்தை பிடித்தவர் தியாகராஜன். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இப்போது மீண்டும் பேசப்படுகிறது. அது ஒரு சாதாரண சம்பவம் இல்லை... ஒரு அவமானத்தை எப்படி லெவலாக ஹேண்டில் பண்ணி வெற்றியாக மாற்றினார் என்பதற்கான கதையே இது.
ஒருமுறை துபாய்க்கு சென்றிருந்த தியாகராஜன், தனது நண்பரை சந்திக்க ஒரு பிரபல கார் ஷோரூம் அருகே காத்திருந்தார். நண்பர் வர சற்று நேரம் ஆகும் நிலையில், "சும்மா நிற்கிறோமே... உள்ளே போய் கார்களைப் பார்ப்போம்" என்று நினைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு ஊழியர், அவரை சரியாக அடையாளம் காணாமல், "கார் வாங்கப் போறீங்களா? வாங்குறவர்கள் மட்டும் தான் உள்ளே பார்க்கணும்... இல்லையெனில் வெளியே போங்க" என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

அந்த ஒரு வார்த்தை... அவமானமாக இருந்தாலும், தியாகராஜன் எந்த வாக்குவாதமும் செய்யாமல் அமைதியாக வெளியே வந்துவிட்டாராம். ஆனால் மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டாராம்.
நண்பர் வந்ததும், "முதலில் ஒரு வேலை இருக்கிறது... இந்த ஷோரூமிலேயே ஒரு கார் வாங்கணும்" என்று சொல்லி மீண்டும் உள்ளே சென்றாராம். இந்த முறை ஒரு சாதாரண பார்வையாளர் அல்ல... வாங்க வருபவர்.
உள்ளே சென்றவுடன், "எனக்கு ஒரு கார் வேண்டும்... என்னை வெளியே அனுப்பிய அதே ஊழியர் தான் அதை டெலிவரி செய்ய வேண்டும்" என்று சொல்லி உடனடியாக பணத்தையும் கொடுத்து விட்டாரா. அந்த ஊழியருக்கு அது ஒரு ஷாக். சில நிமிடங்களுக்கு முன் வெளியே அனுப்பியவரே, இப்போது அந்த விலை உயர்ந்த காரை வாங்கி நிற்கிறாராரே என்று நினைத்துக் கொண்டு இருந்தாரா.
காரை பரிசாக மாற்றிய ஐடியா
இங்குதான் கதை இன்னும் திருப்பம் எடுக்கிறது. அந்த கார் தியாகராஜனுக்குத் தேவையில்லை. அதை அவர் ஒரு மார்க்கெட்டிங் ஐடியாவாக மாற்றினார். நகைக்கடையில் வாங்குபவர்களுக்கு குலுக்கல் பரிசாக அந்த காரை அறிவித்து, கடை முன்பாகவே நிறுத்தினாராம்.
"இந்த கார் குலுக்கலில் வெற்றி பெறுபவர்களுக்கு" என்று ஸ்டிக்கர் ஒட்டி வைத்த அந்த கார், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. ஷோரூமில் கிட்டத்தட்ட தொட்டுப் பார்க்க கூட அனுமதி இல்லாத அந்த கார், இப்போது எல்லோரும் அருகில் சென்று பார்க்கும் நிலைக்கு வந்தது.
இந்த சம்பவம் அந்த கார் நிறுவனத்திற்கே சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, "இந்த காரை வாங்குபவர்கள் அதை குலுக்கல் பரிசாக அறிவிக்கக் கூடாது" என்ற விதியும் வந்தது என்று பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசி இருக்கிறார்.
தியாகராஜன் - சினிமா பயணம்
தியாகராஜன் 1980களில் இருந்து தமிழ் சினிமாவில் செயல்பட்டு வரும் முக்கியமான நடிகர். ஆக்ஷன், குடும்பம், கிரைம் என பல வகை படங்களில் நடித்ததோடு, இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்தவர்.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, வணிக ரீதியிலும் வெற்றி பெறும் படங்களை உருவாக்கும் திறன் அவருக்கு உள்ளது. அதனால் தான் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, முழுமையான சினிமா மனிதர் என்று பார்க்கப்படுகிறார்.
குடும்பம்
தியாகராஜனின் மகன் பிரசாந்த், 90களில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்தவர். பல ஹிட் படங்களில் நடித்த அவர், இன்றும் ரசிகர்களிடம் தனி இடம் வைத்திருக்கிறார். மகனின் வளர்ச்சிக்கும் தியாகராஜன் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications