கைய புடிச்சு இழுத்தியா..? வடிவேலுவின் வீடியோவால் உயிர் தப்பிய பெண்.. ஆனால்! அதிர்ச்சியில் போலீஸ்
சென்னை: நடிகர் வடிவேலு தன்னுடைய காமெடியால் ஒரு பெண் உயிர் தப்பியது குறித்து சமீபத்தில் வெங்கடேஷ் பட்டோடு நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக மக்கள் எல்லோருமே ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியை தேடித்தான். காசு பணம் எவ்வளவு முக்கியமோ அதை போல மகிழ்ச்சியும் எல்லோருக்கும் முக்கியம். எவ்வளவோ ஓடி ஓடி வேலை பார்க்கும் பலரும் மகிழ்ச்சி இல்லாமல் தங்களுடைய வாழ்க்கை நிம்மதி இல்லை என்று புலம்பி கொண்டு இருக்கும் நிலையில் வடிவேலு தன்னுடைய காமெடி ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றி இருக்கிறது என்று சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் வடிவேலுக்கு அறிமுகமே தேவை இல்லை. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த வடிவேலு இப்போது கதாநாயகனாகவும் முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். இவருடைய காணொளிகள் எவர்கிரீன் ஆக எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு இப்போது மீண்டும் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்ன திரையில் சன் டிவியில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் வடிவேலு செஃப் வெங்கடேஷ் பட்டுடன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது என்னுடைய காமெடியால் ஒரு பொன் உயிர் தப்பியது என்பது என்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தான் நான் சொல்லுவேன்.
காரணம் ஒரு நாள் மதுரையிலிருந்து ஒரு போலீஸ் எனக்கு போன் பண்ணி இருந்தார். நானும் என்ன ஆச்சு என்று விசாரித்த போது மதுரையில் ஒரு பெண்ணிற்கும் அவருடைய கணவருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது அந்த பெண்ணின் கனவர் நான் வரும்போது நீ உயிரோடு இருக்காதே செத்துப் போ என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டாராம். இந்த பெண்ணும் நாம இனி உயிரோட இருக்க வேண்டாம் என்று கயிறை எடுத்துக் கொண்டு தூக்கு போட போயிருக்கிறது.
அந்த நேரத்தில் வீட்டில் டிவியில் "நேசம் புதுசு" என்ற திரைப்படத்தில் நான் நடிச்ச கைய புடிச்சி இழுத்தியா? என்ற காமெடி ஓடிட்டு இருந்திருக்கு. அந்த பொண்ணு அந்த காமெடியை பார்த்து அப்படியே சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். புருஷன் திட்டிட்டு வெளியே போனதை பக்கத்து வீட்டில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த பொண்ணு கதவை பூட்டிட்டு உள்ளே தூக்கு போட போனதையும் கவனிச்சிருக்காங்க.
உடனே கதவை போட்டு உடைச்சி இருக்காங்க. ஆனா அந்த பொண்ணு அதையும் கவனிக்காம டிவி பாத்துட்டு இருந்திருக்கு. அப்போ பொதுமக்களோடு போலீசும் அங்கு வந்து பார்க்க அந்த பொண்ணு கையில் கயிற்றை வைத்துக் கொண்டு டிவி பார்த்து சிரிச்சிட்டே இருந்திருக்கு. இதை பார்த்த போலீஸ் யார் யாரிடமோ விசாரிச்சு எனக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னாரு. எனக்கு சந்தோஷமா இருந்து...
அந்த நேரத்தில் அந்த பொண்ணு மட்டும் அந்த காமெடி பார்க்கலனா அந்த பொண்ணு தற்கொலை செஞ்சிருக்கும். அப்படி நடந்து இருந்தா அந்த பெண்ணின் குழந்தைகளும் குடும்பமும் கஷ்டப்பட்டு இருப்பாங்க. எப்படியோ ஒரு உயிர் பிழைத்துவிட்டது என்பது எனக்கு சந்தோசம் தான் என்று அந்த பேட்டியில் வடிவேலு சொல்லி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications