வேலையில்லா பட்டதாரி படம் நான் பண்ண வேண்டியது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செயல்! வசந்த் வசி ஓப்பன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் கேரக்டரில் நடிக்கும் நடிகர் வசந்த் வசி சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.
பொதுவாக பலருக்கும் திறமை இருந்தாலும் ஒரு சிலருக்கு தான் அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு சிலருக்கு எவ்வளவு தான் போராடினாலும் கடைசி நேரத்தில் ஏதாவது சறுக்கல் வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த மாதிரி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செந்தில் கேரக்டரில் நடிக்கும் நடிகர் வசந்த் வசி வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் ஒரு பேட்டியில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

வசந்த் வசி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஏற்கனவே சமையல் தெரிந்திருந்தாலும் கடந்த வாரத்தில் சரியாக சமைக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி அவரை எலிமினேஷன் செய்திருந்தனர். இது பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. வசந்த் வசி வெளியேற்றப்பட்டது அன்பேர் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து வசந்த் வசி பேசுகையில் என்னுடைய வாழ்க்கையில் பல முயற்சிகள் இப்படித்தான் கடைசி நேரத்தில் தோல்வியில் முடிந்திருக்கிறது. நான் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு முறையும் போராடி வருகிறேன். ஆனால் கடைசி நேரத்தில் நூலிழையில் என்னுடைய வாய்ப்புகள் தவறிப் போய் விடுகிறது. இது என்னுடைய வாழ்க்கையில் ஒருமுறை இல்ல பலமுறை நடந்திருக்கிறது.
படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் அதற்காக முயற்சிகள் எடுத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் எனக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாவது பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலாஜி மோகன் நடித்த கேரக்டர் தான் எனக்கு முதலில் கொடுக்கப்பட்டிருந்தது. வேலையில்லா பட்டதாரி படத்திற்கான ஆடிஷனில் கலந்துகொண்டேன். அதில் தேர்வாகிவிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டிற்க்கு சென்று விட்டேன். கேரவனில் டிரஸ் எல்லாம் மாற்றி விட்டேன்.
எனக்கு தனுஷ் சாருக்கு விவேக் சாருக்கு ஒரு காட்சி இருந்தது அதில் நான் என்ன டயலாக் பேச வேண்டும் என்று டயலாக் பேப்பர் கொடுத்து விட்டார்கள். நான் டயலாக் பேசுவதற்கு ட்ரை பண்ணிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் டைரக்டர் மேடம் சௌந்தர்யா என்னை பார்க்கணும்னு சொல்லி இருந்தாங்க. ஏற்கனவே அவங்க என்னை போட்டோவில் பார்த்து இருக்காங்க. நேரில் பார்த்தது கிடையாது. அதனால் பார்க்க வேண்டும் என்று சொன்னாங்க.
நான் அந்த படத்தின் கதைப்படி பாலாஜி மோகன் கேரக்டர், பெரிய பணக்காரர் கேரக்டர், அதனால் ரிச் ஆக தெரிய வேண்டும் என்று தாடியை ட்ரிம் பண்ணிட்டு கொஞ்சம் ஹாஷா போகலாம் என்று போனேன். ஆனால் சௌந்தர்யா மேம்க்கு என்னை பார்க்க சின்னப் பையன் மாதிரி தெரிஞ்சிருக்கு. அதனால் அங்கு கொஞ்சம் கன்பியூஷன் ஆகி எனக்கு பதிலா வேற யாரையாவது மாத்தணும் என்று சொல்லிட்டாங்க.
அன்னைக்கு சூட்டிங் நடக்கல, நானும் சரி என்று வீட்டிற்கு வந்து இரண்டு நாளைக்கு ரொம்ப அழுதேன். அதற்கு பிறகு சரி நமக்கு இவ்வளவுதான் என்று மனதை தேற்றிக் கொண்டேன். பிறகு அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது பாலாஜி பேசிய டயலாக் எல்லாம் எனக்கு பேப்பரில் கொடுத்த அதே டயலாக் அதை பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் நமக்குன்னு எது கிடைக்கணும்னு இருக்குதோ அதுதானே கிடைக்கும் என்று அந்த பேட்டியில் உருக்கமாக வசந்த் வசி பேசி இருக்கும் நிலையில் அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications