என்னை பாவமா பாக்காதீங்க.. 300 ரூபாய் வருமானம் இல்லாமல் ரொம்ப பேரு கஷ்டப்படுறாங்க- விஜய் ஆண்டனி
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய மகள் மறைவிற்கு பிறகு தன்னை பலரும் பாவமாக பார்ப்பதால் அப்படி பார்க்காதீங்க என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். நம்ம நாட்டுல 300 ரூபாய் வருமானத்தில் ரொம்ப பேரு கஷ்டப்படுறாங்க. நான் அப்படி கஷ்டப்படவில்லை என்று மேலும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாக வெளியே சிரித்த முகமாக பலருக்கும் அட்வைஸ் செய்பவர்களின் நிஜ வாழ்க்கை தான் ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். அவர்கள் வெளியே சொல்லாத அளவிற்கு மனதிற்குள் ஆயிரம் கவலைகளை வைத்திருப்பார்கள். ஆனாலும் வெளியே சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதுபோலத்தான் விஜய் ஆண்டனி தன்னுடைய மனதிற்குள் இருக்கும் கஷ்டங்களை எப்போதும் வெளியே சொல்லாமல் சிரித்த முகமாகவும் அடுத்தவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதத்திலும் வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் அவருடைய வலியும் வேதனையும் அவர் சொல்லாமலேயே அவருடைய ரசிகர்களுக்கு தெரியும். சில வருடங்களுக்கு முன்பு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் நூல் இழையில் விஜய் ஆண்டனி உயிர் பிழைத்து இருந்தார். ஏற்கனவே சில விபத்துக்களை விஜய் ஆண்டனி சந்தித்திருந்தாலும் அதில் பல நாள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருடைய மகள் தற்கொலை ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் உலுக்கி விட்டது.
விஜய் ஆன்டனியின் மோட்டிவேஷனல் பேச்சுகள் பலருக்கும் பிடிக்கும். ஆனால் அவருடைய சொந்த மகள் தற்கொலை செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கவலையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் நினைத்த அளவிற்கு அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மழை பிடிக்காதவன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி பேசிய பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஜய் ஆண்டனி என்னை எல்லோரும் பாவமா பார்க்கறாங்க அப்படி பார்க்காதீங்க.. என்னை விட கஷ்டப்படுறவங்க அதிகமானோர் இருக்காங்க. எனக்கு பெருசா எந்த கஷ்டமும் இல்லை.. நான் ஏசி வீட்டில் இருக்கிறேன்.

விலை உயர்ந்த காரில் தான் வந்து கொண்டிருக்கிறேன். சம்பளமும் கை நிறைய வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நம்முடைய நாட்டில் 300 ரூபாய் சம்பளம் கூட இல்லாமல் பலர் வேதனைப்படுகிறார்கள். குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், அடிப்படை செலவுகளுக்கு கூட செய்ய முடியாத நிலையில் தான் பலர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு என்னை கம்பேர் பண்ணும் போது நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நல்ல சாப்பாடு சாப்பிட முடியாமல் பல பேர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை விடவா நான் கஷ்டப்படுகிறேன் என்று அந்த பேட்டியில் விஜய் ஆண்டனி பேசி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications