GOAT OTT: கோட் பற்றி முக்கிய அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. அப்போ தியேட்டரை விட ஓடிடி தான் பெஸ்ட் போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து வெங்கட் பிரபு ஜீ தமிழில் ஒளிபரப்பான கோட் திரைப்பட ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஓடிடியில் இந்த திரைப்படம் வெளியாவது குறித்து சில அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

நடிகர் விஜய் தான் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் இனி அரசியலில் தான் கவனம் செலுத்தப் போவதாகவும் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் கோட் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்தது.

television goat vijay venkat prabhu

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் பல பிரபலங்களும் கெஸ்ட் ரோலில் வந்து பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். அதனாலேயே இந்த திரைப்படத்திற்கு அதிகமான ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். மறைந்த நடிகர் விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் ஏஐ மூலமாக ரி-கிரியேட் செய்யப்பட்டு இருக்கிறார். அதுபோல அஜித் ரசிகர்களை கவரும் விதத்தில் அஜித்தின் வசனம் கடைசியில் இடம்பெற்றிருக்கிறது.

அதுபோல சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோல் கொடுத்து இருக்கிறார். இவர்களோடு மோகன், பிரசாந்த் என்று இந்த படம் முழுக்க பலருக்கும் பரிச்சயமான முக்கிய பிரபலங்களை இயக்குனர் குவித்து விட்டார். அதனாலேயே மக்கள் கூட்டமும் நான்கு நாட்களாக திரையரங்குகளில் அலைமோதுகிறது. இந்த திரைப்படம் தியேட்டரில் 3 மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கான எடிட் வேலை செய்து முடித்த போது மூன்று மணி 40 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இருந்ததாம். ஆனால் இவ்வளவு லென்த்தாக படத்தை வெளியிட்டால் தியேட்டரில் யாரும் படத்தை பார்க்க மாட்டார்கள் என்று இயக்குனர் முடிவு செய்து 37 நிமிட காட்சிகளை குறைத்து தான் தியேட்டரில் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது அதில் குறைக்கப்பட்ட 37 நிமிட காட்சிகளையும் சேர்த்து மூன்று மணி நேரம் 40 நிமிடம் காட்சிகளாக வெளியிடப் போகிறோம் என்று வெங்கட் பிரபு சமீபத்தில் பேசியிருக்கிறார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு இந்த திரைப்படம் எந்த ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் நெட்பிக்ஸ் தளத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதிலும் அக்டோபர் மாதத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும்.

தியேட்டரில் இந்த திரைப்படத்தை பார்த்திருந்தால் கூட அதிகமான ரசிகர்கள் ஓடிடியில் இதை பார்ப்பதற்கு விரும்புவார்கள். காரணம் எந்த காட்சிகள் எல்லாம் புதியதாக இணைக்கப்பட்டிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் தியேட்டரில் படம் பார்க்காத ரசிகர்கள் கூட நாங்கள் மொத்தமாக ஓடிடியில் பார்த்து விடலாம் என்று இருக்கிறோம் என்றும் கூறி வருகிறார்கள்.

அதே நேரத்தில் பல முக்கியமான மற்றும் கலகலப்பான காட்சிகள் கட் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதுவெல்லாம் ஓடிடியில் நாங்கள் சேர்த்து விடுவோம் என்று வெங்கட் பிரபு கூறி இருக்கிறார். ஏற்கனவே விஜய்க்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகளும் அதிகமான ரசிகர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது காலாண்டு பொதுத் தேர்வு தொடங்கி இருக்கிறது. சிலருக்கு தொடங்க இருக்கிறது.

இதனால் பெற்றோர்கள் அந்த மாணவர்களுக்கு தியேட்டருக்கு அனுமதிக்கப்படாமல் இருக்கிறார்கள். இதனால் காலாண்டு விடுமுறையில் இந்த படம் தியேட்டரில் இருந்தால் குழந்தைகள் கொண்டாடுவார்கள். இல்லை எனறால் வீட்டில் குடும்பத்தோடு கொண்டாடலாம் என்று காத்திருக்கிறார்கள்.

கோட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை சினேகா, லைலா, நடிகர் பிரசாந்த் போன்றவர்களோடு வெங்கட் பிரபு ஜீ தமிழில் கோட் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படம் குறித்த பல தகவல்களை பேசி இருக்கிறார். அப்போது கோட் படத்திற்காக சினேகாவிடம் நீங்கதான் விஜய் உடைய ஜோடி என்று சொன்னதும் அவர் எப்படி சந்தோஷப்பட்டார் என்று சினேகாவை கலாய்த்தபடியே பேசி இருக்கிறார். இந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+