நடிகை ரம்பா குடும்பத்தை சந்தித்த விஜய்... வாழ்த்துக்களோடு அவரே வெளியிட்ட போஸ்ட்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: நடிகை ரம்பா குடும்பத்தை நடிகர் விஜய் வெளிநாட்டில் சந்தித்திருந்த நிலையில் அப்போது எடுத்த புகைப்படத்தை ரம்பா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய குழந்தைகளோடு விஜய் விளையாடிக் கொண்டிருக்கும் அழகிய புகைப்படங்களையும் ரம்பா அதில் பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகை ரம்பா என்று சொன்னால் 90ஸ் ரசிகர்கள் பலருக்கும் இப்போதும் ஹார்ட் பீட் எகிற தொடங்கிவிடும். அந்த அளவிற்கு 90ஸ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரம்பா டாப் இடத்தில் இருக்கும் போது சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார். அதற்கு பிறகு சின்ன திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்ட இவர் தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும் வீடியோக்களையும் இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ரம்பாவின் நிஜ பெயர் விஜயலட்சுமி என்பது பலருக்கும் தெரியாது. ரம்பா உழவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதை தொடர்ந்து, உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், சிவசக்தி, செங்கோட்டை, அடிமை சங்கிலி, அருணாச்சலம், ராசி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, உன்னருகே நானிருந்தால், அன்புடன், குங்கும பொட்டு கவுண்டர் என பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தான் 2010ல் பிரகாஷ்ராஜ் உடன் இணைந்து விடியும் வரை கத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகவில்லை. அந்த நேரத்தில் கனடாவை சேர்ந்த இலங்கைத் தமிழரான இந்திரகுமார் பத்மநாதனை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இப்போது நடிகை ரம்பாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அதுவும் குறிப்பாக மானாட மயிலாட ஜோடி நம்பர் ஒன் போன்ற பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்ட நடிகை ரம்பா தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படதை இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நடிகர் விஜய், ரம்பா மற்றும் அவருடைய கணவர் குழந்தைகளோடு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த ரம்பா "பல வருடங்களுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது விஜய் என்று வாழ்த்துக்களும் தெரிவித்திருக்கிறார்" அதோடு இந்த புகைப்படங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற ஹேஸ் டேக்கையும் ரம்பா பகிர்ந்திருக்கும் நிலையில் பலரும் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

ரம்பா மற்றும் விஜய் இருவரும் தனியாக எடுத்து செல்பி புகைப்படங்கள் மற்றும் ரம்பாவின் மகனை விஜய் கொஞ்சி தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் ரம்பாவின் மகள்களோடு விஜய் எடுத்த புகைப்படங்கள் என்று பலவற்றை ரம்பா பகிர்ந்து இருக்கும் நிலையில் இதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ரம்பா எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் உடன் அவர் நடித்த மின்சார கண்ணா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊதா ஊதா ஊதா பூ பாடலும் அந்தப் பாடலுக்கு விஜய் மற்றும் ரம்பாவின் டான்ஸ் பலருடைய மனதை கவர்ந்தது. இப்போது இவர்களுடைய ரீயூனியனை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் அந்த பாடலை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
-
திடீரென பிரச்சார வாகனத்தில் ஏறி விஜய் முகத்துக்கு முன் வந்த சிறுவன்.. இழுத்துப்போட்ட பாதுகாவலர்கள் -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்? -
வாயை விட்ட எடப்பாடி.. இறங்கி அடித்த ஸ்டாலின்.. விடாத அதிமுக.. காணாமல் போன தவெக விஜய்? -
1 மணி நேரம் போதாதா? இன்னும் 15 நாள்தான் இருக்கு.. விஜய்யும் தள்ளாடும் தமிழக வெற்றிக் கழகமும்! -
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விஜய்.. கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து கிரேட் எஸ்கேப்! -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
அடேங்கப்பா.. விஜய் ரெக்கார்டு.. பிரமாண பத்திரத்தை டவுன்லோடு செய்து பார்த்தவர்கள் எண்ணிக்கை இவ்வளவா? -
விஜயை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது! சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்.. ஒய் ஜி மகேந்திரன் ஓபன் -
தவெக தலைவர் வயது 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.. பலே












Click it and Unblock the Notifications