நடிகர் விஜய் சேதுபதியா இப்படி..? "மலேசியா”வில் அந்த பெண்ணுக்கு.. இதற்கெல்லாம் பெரிய மனசு வேணும்..!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மலேசியாவில் ஒரு பெண்ணுக்கு செய்த உதவிதான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி மலேசியாவிற்கு சென்ற இடத்தில் தன்னிடம் ரசிகை என்று ஒரு பெண் கேட்ட உதவிக்கு சற்றும் எதிர் பார்க்காமல் அதை செய்து கொடுத்திருக்கிறார்.

என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி "மக்கள் செல்வன்" என்று அதிகமான ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். விஜய் சேதுபதி தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கிறது.
வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் இவர் காலடி எடுத்து வைத்து நான் இல்லாத இடமே இருக்கக் கூடாது என்று புதுவிதமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வருடத்தில் அதிகமான படங்களை கொடுக்கும் நடிகர்களில் இவரும் ஒரு ஆளாக இருக்கிறார். விளம்பரங்கள், திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோ என்று அனைத்து இடங்களிலும் இவருடைய முகம் பிரதிபலிக்கிறது.
ஆனாலும் சமீப காலமாக அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் அந்த அளவிற்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனால் வில்லனாக மாஸ் காட்டிய படங்கள் எல்லாம் பெரிய அளவில் கிட் அடித்து விடுகிறது. அதனாலயே விஜய் சேதுபதியை வில்லனாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இவர் கடைசியாக நடித்து வெளியான விடுதலை திரைப்படம் போன்ற ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு அதிகமான வரவேற்பை கொடுத்து இருக்கிறது.
நான் ஹீரோ என்பதை மறக்கவில்லை என்று சொல்லும் விதமாக குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவர் மலேசியாவிற்கு சென்றிருக்கும் போது அந்த தகவல்கள் தெரிந்த மலேசியாவாழ் தமிழர்கள் விஜய் சேதுபதியை முற்றுகையிட்டு விட்டார்களாம்.
அப்போது ஒரு பெண் ரசிகை தனியாக வந்து விஜய் சேதுபதியிடம் தான் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி சொல்லி அழுது புலம்பி இருக்கிறார். என்னன்னா, அங்கே மலேசியாவில் வீட்டு வேலைக்கு இவர் அழைத்து வரப்பட்டாராம். ஆனால் அந்த வேலை பிடிக்காமல் அந்த கம்பெனிக்கு தெரியாமல் வெளியே வந்து கிடைக்கிற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாராம்.
ஆனால் விசா நேரம் முடிந்ததும் தமிழகத்திற்கு போக முடியாத நிலையில் இருக்கிறேன் என்று அந்த பெண்மணி கூறியிருக்கிறார். இதையெல்லாம் விஜய் சேதுபதியிடம் கூற விஜய் சேதுபதி உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அந்த பெண்மணியை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தாராம். இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications