Mr. கணியன்.. வாழ்க நீ! தன் ரசிகர் மன்ற செயலாளரின் குழந்தைக்கு பெயர் சூட்டி நெகிழ வைத்த விஜய் சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ரசிகர் மன்ற செயலாளர் குமரனின் குழந்தைக்கு கணியன் என்று மருத்துவமனையில் வைத்து பெயர் சூட்டியிருக்கிறார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆக வருகிறது.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் சேதுபதி ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய ரசிகர்களிடம் சாதாரணமாக பழகி வருவதை பார்த்து பலருக்கும் இவர் ஃபேவரைட் ஆக மாறிக்கொண்டிருக்கிறார்.

vijay tv bigg boss entertainment

இவருடைய நடிப்பு பலருக்கு பிடித்திருந்தாலும் இவருடைய இயல்பான குணம் அதிகமாக பிடிக்கபட்டாதாலே இவர் நடிகர்களில் தனித்து நிற்கிறார். இவரைப் பார்க்கும் நடிகர்களாக இருந்தாலும், சரி ரசிகர்களாக இருந்தாலும் சரி விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து இச்சென்று ஒரு முத்தம் கொடுத்து அவர்களின் அன்பை சம்பாதித்து விடுகிறார். விஜய் சேதுபதியிடம் முத்தம் வாங்க வேண்டும் என்றே பல நடிகர்கள் கூட நிகழ்ச்சிகளில் அவரிடம் அன்பாக வேண்டுகோள் வைப்பதை பார்த்திருப்போம்.

அதுபோல பல நடிகர்கள் செய்யும் உதவிகளை பலருக்கு தெரியப்படுத்தி கொண்டிருந்தாலும் விஜய் சேதுபதி தான் செய்யும் உதவியை பெரிதாக வெளியே காட்டிக் கொண்டது கிடையாது. சமீபத்தில் கூட ஒரு இயக்குனர் இறந்து போய்விட்ட பிறகு அவருடைய குழந்தைகளின் படிப்பு செலவுக்கு விஜய் சேதுபதி பணம் கொடுத்து உதவி இருந்தார். ஆனால் அந்த உதவியை அவர் வெளியே சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்த நிலையிலும் அந்த இயக்குனரின் குடும்பத்தினர் அது குறித்து பெருமையாக பேசி இருந்தனர்.

vijay tv bigg boss entertainment

அதுபோல மறைந்த நடிகர் தெனாலியின் மகன் படிப்பு செலவை விஜய் சேதுபதி ஏற்றிருந்தார். இப்படி பலருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் ரசிகர் மன்றத்தினரையும் மனம் குளிரும் வகையில் சில செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இன்று தன்னுடைய ரசிகர் மன்றத்தின் அகில இந்திய செயலாளர் குமரனுக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அந்த குழந்தையை மருத்துவமனையில் சென்று பார்த்து இருக்கிறார்.

அந்த குழந்தைக்கு விஜய் சேதுபதி தான் பெயர் சூட்ட வேண்டும் என்று பெற்றோர் கூறி இருந்த நிலையில் கணியன் என்று அழகான தமிழ் பெயர் சூட்டி "மிஸ்டர் கணியன் வாழ்க நீ" என்று குழந்தைக்கு நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் இந்த செயலுக்கு பலர் பாராட்டி வருகிறார்கள்.

vijay tv bigg boss entertainment

அதிலும்" யாரும் ஊரே யாவரும் கேளிர்" என்ற அருமையான வரிகளை உலகத்திற்கு எடுத்துக்காட்டிய கணியன் பூங்குன்றனாரின் பெயரில் கணியன் என்ற பெயரை விஜய் சேதுபதி அந்த குட்டி குழந்தைக்கு சூட்டி இருக்கும் நிலையில் அது குறித்தும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+