ஸ்ரீதேவி “அப்படி” நடிச்சு தான் வீட்டில் எல்லோரையும் ஏமாற்றி வைத்திருக்கிறார்.. நடிகை வனிதா ஓப்பன்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று சிறப்பாக முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு குடும்பத்தினரால் அழைக்காமல் இருக்கும் வனிதா சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகை வனிதா தன்னுடைய தங்கை ஸ்ரீ தேவி எந்த பொருள் வேண்டும் என்றாலும் அழுது அடம் பிடித்து அதைப் பெற்று விடுவார். அதோடு வீட்டில் இருப்பவர்கள் எல்லாரையும் ஏமாற்றி வைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் நடைபெற்ற நடிகர் விஜயகுமாரின் குடும்ப திருமண புகைப்படங்கள் மற்றும் அதில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. அதிலும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி மற்றும் விஜயகுமாரின் மகளான அனிதாவின் மகள் தியாவின் திருமணம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது.

ஆனாலும் இந்த திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தடபுடலான வேலைகள் தொடங்கிவிட்டன. அதை தொடர்ந்து சங்கீத் விழா, மெஹந்தி விழா என்று விஜயகுமாரின் வீடு மகிழ்ச்சியில் திகைத்து கொண்டு இருந்தது. அதோடு விஜயகுமார் குடும்பத்தினரும் அந்த பங்க்ஷனில் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒரு பக்கம் விஜயகுமாரின் மகளான அனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா, கவிதா என அனைவரும் மேக்கப் போட்டுக்கொண்டு விதவிதமான புடவை மற்றும் நகை அலங்காரத்தோடு புகைப்படங்களை எடுத்து குவித்து வந்தனர்.
அதே நேரத்தில் விஜயகுமாரின் மகனான அருண் குமாரும் அவர் பங்குக்கு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் விஜயகுமாரின் மகளான அனிதா, சரத்குமார் நடித்த கூலி திரைப்படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்திருப்பார். அதுபோல விஜயகுமாரின் வீட்டில் எல்லோருமே நடிகர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கு பிறந்த வனிதா விஜயகுமார் குடும்ப பிரச்சனையின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இது எல்லோருக்குமே தெரியும். வனிதாவின் குடும்ப பிரச்சனை சிறந்த புத்தகமாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும் சமீபத்தில் வனிதா பேசிய வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது நான் தான் எங்க அம்மாவிடம் அதிகமாக அடி வாங்குவேன்.

எங்க வீட்டில் எந்த பிரச்சனை செய்தாலும் ஸ்ரீ பாப்பா மட்டும் அடி வாங்காமல் தப்பி விடுவார். சரியான கேடி... ஏதாவது பிரச்சனை செய்துவிட்டு வீட்டிற்குள் கதவை பூட்டிக்கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சின்னத்தம்பி குஷ்பு போல அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்து எல்லோரையும் பயப்பட வைத்து விடுவாள். இந்த பொண்ணு கிட்ட ஏதாவது சொன்னா ஏதாவது பண்ணிக்குமோனு எல்லாரும் பயந்து விடுவார்கள். அந்த மாதிரி நடிச்சு எல்லாரையும் பயம் காட்டி வச்சிருக்கா என்று அந்த வீடியோவில் நடிகை வனிதா தன்னுடைய தங்கை ஸ்ரீதேவி பற்றி பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications