நடிகர் அருண் விஜய்யின் அம்மாவுக்கு பிறந்தநாள்.. முதல் முன்னுரிமை! விஜயகுமாரின் மகள் வெளியிட்ட போஸ்ட்
சென்னை: விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகர் அருண் விஜய் மற்றும் அவருடைய மகன் என பலர் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பழம்பெரும் நடிகரான விஜயகுமார் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாக நடித்து இப்ப வரைக்கும் முன்னணி கேரக்டர்களில் சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயகுமார் மட்டுமல்லாமல் அவருடைய மகன் மகள்கள் என அவருடைய வீட்டில் அதிகமானோர் நடிகர்களாக இருக்கின்றனர்.

ஆனால் அவருடைய வீட்டில் ஒரே ஒரு மகள் மட்டும் நடிப்புத் துறையை தேர்ந்தெடுக்காமல் படிப்பு துறையை தேர்ந்தெடுத்து டாக்டராக மாறி இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா தான். விஜயகுமார் நல்லக்கண்ணு என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவருக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருந்தபோது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இதில் வனிதா மட்டும் குடும்பத்தை பிரிந்து தனியாக இருக்கிறார். இந்த நிலையில் விஜயகுமாரின் இரண்டு மனைவியின் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றனர். சமீபத்தில் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதாவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது.

அது பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில் இணையத்தில் விஜயகுமார் வீட்டு திருமணத்தைப் பற்றி பலரும் பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் விஜயகுமாரின் மூத்த மனைவி நல்ல கண்ணுவின் பிறந்தநாளை விஜயகுமார் மற்றும் அவருடைய மகன், மகள், பேரன் பேத்திகள் என எல்லோரும் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்கள்.

அப்போது எடுத்த புகைப்படத்தில் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் அவருடைய மகனோடு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்த விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "குடும்பமே எனது எல்லா நேரத்திலும் முதல் முன்னுரிமை மற்றும் வாழ்க்கையின் நோக்கம்" என்னுடைய அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என்று பதிவு வெளியிட்டிருக்கும் நிலையில் இது அதிகமான கருத்துக்களையும் லைக்குகளையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications